Vastu Tips : வீட்டில் அடிக்கடி சண்டையா? அமைதி நிலவ கல் உப்பை 'இந்த' இடத்தில் வைங்க!!

Published : Mar 03, 2025, 07:08 PM ISTUpdated : May 03, 2025, 07:17 PM IST

Vastu Tips For Peace At Home : உங்களது வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருகிறது என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

PREV
15
Vastu Tips : வீட்டில் அடிக்கடி சண்டையா? அமைதி நிலவ கல் உப்பை 'இந்த' இடத்தில் வைங்க!!
Vastu Tips

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இதில் கொல்லப்பட்டுள்ள விஷயங்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களின்படி, வீட்டில் இருக்கும் பொருட்களை சரியான திசையில் வைத்தால் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கும். அதுவே நீங்கள் வாஸ்து விதிகளை பின்பற்றவில்லை என்றால், வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படும். இதனால் வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் இடையே சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் தான் நிலவும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டிலும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடு நிலவுகிறது என்றால் அதற்கு வாஸ்து குறைபாடு தான் காரணம். எனவே வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகள் போக்கி, வீட்டில் அமைதி நிலவ கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை நிச்சயம் உங்களுக்கு உதவும். அவை..

25
புத்தர் சிலை

உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது என்றால், நிச்சயமாக உங்களது வீட்டில் ஒரு புத்தர் சிலையை வாங்கி வைக்கவும். புத்தர் சிலை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கின்றது. புத்தரின் சிலை இருக்கும் வீட்டில் எப்போதுமே அமைதிதான் நிலவும். மேலும் புத்தர் இருக்கும் இடம் மங்களகரமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

35
உடைந்த கண்ணாடி

உங்களது வீட்டில் உடைந்த கண்ணாடி இருந்தால் உடனே அதை தூக்கி வெளியே எறிந்து விடுங்கள். ஏனெனில் உடைந்த கண்ணாடி வீட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோல வீட்டில் பல கண்ணாடிகள் இருந்தால், அது வீட்டை அழகாக காட்டுவது மட்டுமல்லாமல், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருகிறது. வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால் சண்டைகள் மற்றும் சச்சரவுகள் வராது. முக்கியமாக வாஸ்து சாஸ்திரத்தின் படி, கண்ணாடியை நீங்கள் எப்போதும் வடக்கு திசையில் தான் வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

45
கல் உப்பு:

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உப்பு எல்லா வகையான எதிர்மறையா ஆற்றலையும் நீக்க உதவுகிறது என்று சொல்லப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் சண்டே சச்சரவுகள் அடிக்கடி நிலவுகிறது என்றால், அறையின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும். முக்கியமாக கல் உப்பு ஒவ்வொரு மாதமும் மாற்ற வேண்டும். இது குடும்பத்தில் சண்டைகளை குறைத்து, மகிழ்ச்சி மற்றும் அமைதியை தரும். 

55
கற்பூரம்

வீட்டில் நடக்கும் சண்டைகள் தீர்க்க கற்பூரம் உதவியாக இருக்கும். இதற்கு இரவு தூங்கும் முன் கற்பூரத்தை பித்தரை விளக்கில் வைத்து எரிய வைக்கவும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் சண்டைகள், சச்சரவைகள் நீங்கி, அமைதி நிலவும். வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கற்பூரத்தை ஏற்றி அதன் புகையை வீடு முழுவதும் பரப்ப செய்யுங்கள். இதனால் வீட்டில் அமைதி பரவும்.

Read more Photos on
click me!

Recommended Stories