Astrology: 500 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது.!

Published : Oct 14, 2025, 02:06 PM IST

Vaibhav Lakshmi Rajyog: இந்த ஆண்டு தீபாவளியன்று சுக்கிரனும், சந்திரனும் கன்னி ராசியில் இணைந்து வைபவ லட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். 500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய சேர்க்கை நடைபெற உள்ளது. இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தர உள்ளது.

PREV
14
வைபவ லட்சுமி ராஜயோகம் 2025

ஜோதிடத்தின் படி இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் பல மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த ஆண்டு தீபாவளி அன்று செல்வத்தை அள்ளித் தரும் சந்திரனும், லட்சுமி கடாக்ஷம் நிறைந்த சுக்கிரனும் கன்னி ராசியில் இணைந்து, வைபவ லட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். 500 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் இந்த அரிய ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. 

இவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களுடன், முன்னேற்றத்தையும் அனுபவிக்க இருக்கிறார்கள். தீபாவளிக்குப் பிறகு இவர்களுக்கு பொற்காலம் தொடங்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
கன்னி
  • வைபவ லட்சுமி ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும். 
  • இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் லக்ன வீட்டில் (முதல் வீட்டில்) அமைய இருக்கிறது. 
  • இதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமைத் திறன் மேம்படும். 
  • நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணிபுரியும் நபர்களுக்கு புதிய தலைமை பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
  • வெளிநாட்டுப் பயணம் அல்லது வெளிநாட்டுடன் தொடர்புடைய பணிகளில் வெற்றி கிடைக்கும். 
  • குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் நேர்மறையான உரையாடல்கள் மற்றும் புரிதல்கள் அதிகரிக்கும். 
  • இதன் காரணமாக உறவுகள் வலுப்பெறும். 
  • வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு. 
  • திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். 
  • திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன்கள் தேடி வரும்.
34
மகரம்
  • வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாவது மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரவுள்ளது. 
  • இந்த ராஜயோகம் ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்தில் உருவாக இருக்கிறது. 
  • இதன் காரணமாக உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். 
  • தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். 
  • தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
  • பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. 
  • வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். இதன் காரணமாக நிதிநிலைமை வலுப்பெறும். 
  • உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். 
  • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 
  • போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
44
கும்பம்
  • கும்ப ராசிக்காரர்களுக்கு வைபவ லட்சுமி ராஜயோகம் பயனுள்ளதாக அமையும். 
  • இந்த ராஜயோகம் வருமானம் மற்றும் முதலீடுகளை குறிக்கும் 11 ஆம் இடத்தில் அமையவிருக்கிறது. 
  • இதன் காரணமாக வருமானத்தில் பெரும் அதிகரிப்பு ஏற்படும். 
  • தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். 
  • ஏற்கனவே செய்திருந்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 
  • பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். 
  • வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். 
  • குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.
     

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories