Navapancham Rajyog: சுக்கிரன் மற்றும் புளூட்டோ இணைவு காரணமாக அக்டோபர் 14 ஆம் தேதி சிறப்பான நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரவுள்ளது.
வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்களில் சுக்கிரன் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படுகிறார். இவர் 26 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இவர் மீண்டும் அதே ராசிக்கு திரும்ப சுமார் ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார். சுக்கிர பகவான் அன்பு, செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் ஒரு ராசியில் நுழையும் பொழுது மற்ற கிரகங்களுடன் இணைப்புகள் அல்லது அம்சங்களை உருவாக்கி ராஜயோகங்களை உருவாக்குகிறார். தற்போது கன்னி ராசியில் இருக்கும் சுக்கிரன் புளூட்டோ உடன் இணைந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
25
நவபஞ்சம ராஜயோகம்
ஜோதிடத்தின் படி அக்டோபர் 14 ஆம் தேதி இரவு 10:14 மணிக்கு சுக்கிரனும் யமனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருப்பார்கள். இதன் காரணமாக நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இந்த சமயத்தில் சுக்கிரன் கன்னி ராசியிலும், யமன் மகர ராசியிலும் இருக்கின்றனர். இந்த யோகமானது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை கொண்டு வரவுள்ளது. சில ராசிக்காரர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள், வணிகத்தில் முன்னேற்றம், எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
35
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் பல வழிகளில் நன்மைகளை தரவிருக்கிறது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிந்து செல்வம் விரைவாக அதிகரிக்கும்.
நிதி நிலைமை சீரடையும். பழைய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
ரிஷப ராசியினர் தங்கள் குடும்பத்தினருடன் ஒரு பயணத்தை திட்டமிடலாம்.
இதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
எதிர்பாராத லாபம் காரணமாக வங்கி இருப்பு அதிகரிக்கும்.
குழந்தைகளிடமிருந்தும் சுப செய்திகளை எதிர்பார்க்கலாம்.
சுக்கிரன் மற்றும் யமன் இருவரும் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
ஏனெனில் மகர ராசியில் அதிர்ஷ்ட வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது.
இதன் காரணமாக ஏராளமான அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கலாம்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கப்படலாம்.
வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் பயனுள்ளதாக இருக்கும்.
கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் காரணமாக மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.
55
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சுக்கிரன் மற்றும் புளூட்டோவின் இணைவு பல வழிகளில் நன்மையை தரவுள்ளது.
அவர்கள் வாழ்க்கையின் பல நிலைகளில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
பொன், பொருள், ஆடம்பரம், வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன் தேடி வரும்.
வேலை செய்பவர்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
உங்கள் ஆளுமையில் முன்னேற்றத்தையும், நம்பிக்கையும் உணர்வீர்கள்.
வாழ்க்கையில் புதிய வசந்தங்கள் வரக்கூடும்.
நீண்ட காலமாக நிலவில் வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
இதன் காரணமாக மன மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)