Astrology: மிதுன ராசியில் 3 கிரகங்கள் இணைவதால் உருவாகும் திரிகிரகி யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது

Published : Aug 18, 2025, 10:57 AM IST

ஆகஸ்ட் 18, 2025 அன்று மூன்று கிரகங்கள் இணைந்து திரிகிரகி யோகத்தை மிதுன ராசியில் உருவாக்குகின்றன. இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

PREV
16
Trigrahi Yoga in Gemini on August 18, 2025

திரிகிரகி யோகம் என்பது மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் பொழுது ஏற்படும் ஒரு அரிய மற்றும் சக்தி வாய்ந்த யோகமாகும். இது ஒரு ஜாதகத்தில் நல்ல பலன்களை அளிக்கும் சுபயோகமாக கருதப்படுகிறது. இந்த யோகமானது ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் நிதி, தொழில், குடும்பம், ஆரோக்கியம் என பலவற்றிலும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 18 2025 ஆம் தேதி மிதுன ராசியில் மூன்று கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன் ஆகியவை இணைகின்றன. இந்த இணைவு சக்தி வாய்ந்த திரிகிரகி யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் ஆகஸ்ட் 20, 2025 வரை மூன்று நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

26
திரிகிரகி யோகம் என்றால் என்ன?

ஆகஸ்ட் 18, 2025 அன்று சந்திரன் மிதுன ராசியில் நுழைகிறார். அங்கு ஏற்கனவே சுக்கிரன் ஜூலை 26 முதல் பயணித்து வருகிறார். அதேபோல மிதுன ராசியில் குருவும் சஞ்சாரம் செய்து வருகிறார். இதன் காரணமாக மூன்று கிரகங்கள் மிதுன ராசியில் பயணிக்க உள்ளனர். சந்திரன் மனம், உணர்ச்சிகள், பயணங்கள் ஆகியவற்றை குறிக்கும் ஒரு கிரகமாகும். குரு ஞானம், செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக இருக்கிறார். சுக்கிரன் மகிழ்ச்சி, காதல், ஆடம்பரம் மற்றும் உறவுகளை குறிக்கும் கிரகமாகும். இந்த மூன்று சுப கிரகங்களின் இணைவு மிதுன ராசியில் நல்ல பலன்களை கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு அரிய நிகழ்வு என்பதால் இந்த யோகத்தின் தாக்கம் குறிப்பிடத்தகுந்த அளவில் இருக்கும். இந்த திரிகிரகி யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

36
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு திரிகிரகி யோகம் வேலை மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரவுள்ளது. பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது வேலை கிடைக்காமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கலாம். கடனாக கொடுத்த பணம் திருப்பி கிடைக்க வாய்ப்புள்ளது. நிலவையில் இருந்த பணப் பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள், பிரச்சனைகள் சரியாகும். குடும்ப உறுப்பினர்களுடனான பிணைப்பு வலுப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன உறுதி உயரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தையும், வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.

46
மிதுனம்

மிதுன ராசியில் திரிகிரகி யோகம் உருவாவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று நாட்கள் மிக சிறப்பானதாக அமையும். வருமானத்தில் அபரிமிதமான வரவு கிடைக்கலாம். புதிய வேலைகள் மற்றும் பெரிய பொறுப்புகள் கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், அரசு டெண்டர்கள், பல ஒப்பந்தங்களில் இருந்து லாபம் பெறலாம். சமூகத்தில் நற்பெயர் மற்றும் மரியாதை உயரும். போட்டியாக வந்தவர்களை எளிதில் வெற்றி பெறும் சூழல் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் தெளிவு உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். ஏற்கனவே வியாபாரம் மற்றும் தொழில் செய்து வருபவர்களுக்கு அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல சூழல் நெருங்கியுள்ளது. திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மேலும் சிறப்பானதாகவும், திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தியும் வந்து சேரும்.

56
கன்னி மற்றும் துலாம்

கன்னி ராசிக்காரர்களுக்கு திரிகிரகி யோகத்தால் புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வுகள், வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த யோகம் மாணவர்களுக்கு பெருமளவு கை கொடுக்க உள்ளது. அவர்கள் கல்வியில் பெரும் வெற்றி பெறுவார்கள். தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். எதிர்காலத்திற்கான பாதுகாப்பு உறுதியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். சட்டப் போராட்டங்கள் நடத்தி வருபவர்களுக்கு இந்த காலத்தில் வெற்றி கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கும் இந்த யோகம் நிதி ரீதியான சாதகமான சூழலை ஏற்படுத்தும். மற்றவரிடம் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வணிக உறவுகள் உருவாகும். தலைமைத்துவம் மேம்படும். தொழிலில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படும். வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். மனரீதியாக அமைதி நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.

66
50 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் யோகம்

திரிகிரகி யோகம் 12 ராசிகளுக்கும் பலன்களைத் தரும் என்றாலும் மேற்கூறிய நான்கு ராசிகளுக்கு மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும். மற்ற ராசிக்காரர்களுக்கும் இந்த யோகம் சிறிய அளவில் நிதி முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரலாம். சில ஆதாரங்களின்படி 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த யோகம் மிதுன ராசியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த யோகம் மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றியை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. இந்த தகவல்கள் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடலாம். எனவே முழுமையான பலன்களைத் தெரிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories