மேஷம்
உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் வரும் காலம் இதுவாகும். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நிதி வரவு அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பணமாகும் நிலை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். விரோதிகள் தாமாக விலகுவார்கள்.
கடகம்
சனி பகவான் உங்களுக்கு வீடு, வாகனம், நிலம் போன்ற சொத்து பலன்களை வழங்குகிறார். குடும்ப உறவுகள் வலுப்படும். கடனில் சிக்கியிருந்தவர்கள் விடுதலை அடைவார்கள். பண வரவு அதிகரித்து சேமிப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நிலைத்தன்மை ஏற்படும்.
துலாம்
தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நீண்ட நாள் காத்திருந்த லாபங்கள் கையில் விழும். வெளிநாட்டில் இருந்து பணவரவு கிடைக்கும். உங்களை எதிர்த்து நின்றவர்கள் கூட ஆதரவாளர்களாக மாறுவார்கள். சனி அருளால் புகழ் உயர்வும் கிடைக்கும்.
மகரம்
சனி பகவான் தனது சொந்த ராசியிலே இருப்பதால் உங்களுக்கு அபார பலன்களை தருகிறார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் விரிவடையும். சமூகத்தில் மதிப்பு உயரும். புதிய முதலீடுகள் மூலம் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சந்தோஷம் பெருகும்.
மீனம்
உங்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். சனி உழைப்புடன் கூடிய அதிர்ஷ்டத்தையும் சேர்த்து தருகிறார். பங்குச் சந்தை, முதலீடு, சொத்து வாங்குதல் போன்றவற்றில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிலைத்தன்மை ஏற்படும். உங்களை எதிர்த்தவர்கள் விலகி, உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.