போதுமுடா சாமி, எவ்வளவு கஷ்டமுன்னு புலம்பிய உங்களுக்கு சனி பகவான் வாரி வழங்க போறாரு!

First Published | Nov 29, 2024, 9:21 AM IST

Sani Peyarchi 2025 Palan : 2025 ஆம் ஆண்டு கும்பத்திலிருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆகும் சனி பகவான் யாருக்கெல்லாம் என்னென்ன பலன்களை கொடுக்கும் என்பது குறித்து பார்க்கலாம்…

Saturn Transit 2025, Sani Peyarchi 2025 Palan Tamil

சனி பெயர்ச்சி 2025:

Sani Peyarchi 2025 Palan : சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்வார். அந்த வகையில் தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த பெயர்ச்சி மார்ச் 29ஆம் தேதி நிகழ்கிறது. இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அவர்கள் இதுவரையில் அடைந்த கஷ்டங்களுக்கு விடுவுகாலம் பிறக்க போகிறது. சில ராசிகளுக்கு ஏழரை ஆரம்பமாகும். சில ராசிகளுக்கு ஏழரையின் அடுத்த இரண்டரை ஆண்டுகள் நடைபெறும். அந்த வகையில் சனியின் இந்த பெயர்ச்சியால் மகரம், விருச்சிகம், துலாம், கடகம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Top 4 Lucky Zodiac Signs Sani Peyarchi 2025 Palan, 2025 Sani Peyarchi Palan Tamil

கடக ராசிக்கு முன்னேற்றம் உண்டாகும்:

கடக ராசிக்கு முன்னேற்றமான ஆண்டாக இருக்க போகிறது. சனி பகவான் உங்களுக்கு 9ஆவது வீட்டிற்கு வருவதால் அஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை இல்லாத கடக ராசியினருக்கு நல்ல வேலை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள்.

Tap to resize

Top 4 Lucky Zodiac Signs Sani Peyarchi 2025 Palan, Saturn Transit 2025

ரிஷப ராசிக்கு நன்மைகள் உண்டாகும்:

ரிஷப ராசிக்கு சாதகமான நிலையில் சனி பகவான் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இருப்பதால் எல்லா விதமான நன்மைகளும் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவீர்கள். வேலைப்பளுவிலிருந்து விடுதலை கிடைக்கும். இதுவரையில் அலுவலகத்தில் இருந்து வந்த அழுத்தம் இனி இருக்காது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

Top 4 Lucky Zodiac Signs Saturn Transit 2025, Sani Peyarchi 2025

மகரம் ராசிக்கு ஏழரையிலிருந்து விடுதலை:

ஏழரை சனியிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். இதுவரையில் ஏழரையால் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைக்க போகுது. வாழ்வில் இனி உங்களுக்கு ஏறுமுகம் தான். வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். புதிய வீட்டுக்கு மாறுவீர்கள். நீங்கள் கொடுத்து வராமல் இருந்த பணம் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சனி பகவான் இனி உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்வார்.

Top 4 Lucky Zodiac Signs Sani Peyarchi 2025 Palan

துலாம் ராசிக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்:

சனியின் சஞ்சாரம் மீன ராசிக்கு செல்வதால், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். தீராத நோயிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரையில் இருந்து வந்த பொருளாதார பிரச்சனை இனி உங்களுக்கு இருக்காது. உங்களுடைய திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

Saturn Transit 2025, Sani Peyarchi 2025 Palan Tamil

விருச்சிகம் ராசிக்கு வருமானம் அதிகரிக்கும்:

வருமானத்துக்கான வழிகள் பிறக்கும். தடைபட்ட சுபகாரிகள் அடுத்தடுத்து நடந்து வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடும். பொருளாதார பிரச்சனைகள் சரியாகும். புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

Latest Videos

click me!