Today Rasi Palan: இன்று சுக்கிர பிரதோஷம்.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

Published : Jun 12, 2026, 06:00 AM IST

Today Rasi Palan Tamil: இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி இருக்கும்? யாருக்கு வேலை கிடைக்கும், யாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படும்? 12 ராசிகளுக்குமான முழுமையான பலன்களை இங்கே பார்க்கலாம். 

PREV
113
Rasi Palan Today - 12 june 2026

ஜூன் 12, 2026 ராசிபலன்: ஜூன் 12, 2026 வெள்ளிக்கிழமை அன்று பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் வருவதால் இது சுக்கிர பிரதோஷம் என்று அழைக்கப்படும். அன்றைய தினம் அதிகண்ட, சுகர்மா, வஜ்ர, முத்கர மற்றும் சர்வார்த்த சித்தி என 5 விதமான சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். எந்த ராசிக்கு என்ன பலன் என்று விரிவாகப் பார்க்கலாம்.

Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!

213
மேஷ ராசிபலன்

இன்று உடல் சோர்வும், ஆற்றல் குறைவும் ஏற்படலாம். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம், இல்லையென்றால் நிதி நிலைமை பாதிக்கப்படலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் திட்டங்கள் இன்று வெற்றி பெறும்.

பரிகாரம்: இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு செவ்வரளி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது.

Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்ககிட்ட ரகசியம் சொன்னா அவ்வளவுதான்.! ஊரு பூரா தம்பட்டம் அடிச்சிடுவாங்க.!

313
ரிஷப ராசிபலன்

வேலை அல்லது தொழிலில் மாற்றம் செய்ய அவசரப்பட வேண்டாம். பொறுமையாக இருப்பது உங்களுக்கு அதிக நன்மைகளைத் தரும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள், இதனால் பழைய நினைவுகள் மலரும். திருமண வாழ்வில் இணக்கம் நன்றாக இருக்கும்.

பரிகாரம்: பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கு கைப்பிடி பச்சரிசியும் வெல்லமும் சமர்ப்பித்தால், கடன் தொல்லைகள் நீங்கி, தைரியம் கூடும்.

Solar Eclipse 2026: இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல் அதிகரிக்கப் போகுது.!

413
மிதுன ராசிபலன்

உடல்நலப் பிரச்சினைகளை அலட்சியம் செய்தால் பாதிப்பு ஏற்படலாம். வெளிநாடு தொடர்பான வேலைகளில் தாமதம் அல்லது தடைகள் வர வாய்ப்புள்ளது. திருமண வாழ்வில் பொறுமையும், புரிதலும் தேவை. அறிமுகம் இல்லாதவர்களை அதிகம் நம்ப வேண்டாம்.

பரிகாரம்: இன்று சிவபெருமானுக்கு பசும்பால் அல்லது இளநீர் அபிஷேகத்திற்கு கொடுத்து வழிபடவும்.

Astrology: மேஷ ராசியில் இணையும் சக்தி வாய்ந்த கிரகங்கள்.! 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையா சேரப்போகுது.!

513
கடக ராசிபலன்

நிலம், சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிம்மதி கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கையால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலை அல்லது தொழிலில் புதிய வாய்ப்புகள் வரலாம். திடீர் பயணத் திட்டம் உருவாகும். உடல் நலனில் கவனம் தேவை.

பரிகாரம்: நந்திக்கு வெள்ளை நிற மலர்களைச் சாற்றி வழிபட, தம்பதி ஒற்றுமை பலப்படும், பண வரவு அதிகரிக்கும்.

613
சிம்ம ராசிபலன்

வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதால் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகளுக்கான திட்டம் உருவாகலாம். புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: இன்று சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

713
கன்னி ராசிபலன்

குடும்ப உறுப்பினர்களுடன் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் சில செயல்களால் இன்று சங்கடமாக உணரலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டுப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும்.

பரிகாரம்: நந்தி பகவானுக்கு பச்சை பயறு (சுண்டல்) நைவேத்தியம் செய்து, பிரசாதமாகப் பிறருக்கு வழங்குங்கள்.

813
துலாம் ராசிபலன்

குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் உங்களுக்கு நிம்மதியைத் தரும். வீட்டில் சூழல் பாசிட்டிவாகவும் அமைதியாகவும் இருக்கும். பொழுதுபோக்கிற்காக திரைப்படம் அல்லது பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழலாம். இடமாற்றம் தொடர்பான முடிவுகளை யோசித்து எடுக்கவும். குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தி தேவருக்கு சந்தன அபிஷேகம் செய்ய சந்தனம் வாங்கித் தரலாம்.

913
விருச்சிக ராசிபலன்

உணவு விஷயத்தில் அலட்சியமாக இருப்பதால் வயிற்றுப் பிரச்சினை ஏற்படலாம். அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஆசை நிறைவேறும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குக் கெரியர் சம்பந்தமாக நல்ல செய்தி கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளை நந்தியாவட்டை மலர்களால் சிவனை வழிபட, மனக்குழப்பங்கள் நீங்கி, வீட்டில் அமைதி நிலவும்.

1013
தனுசு ராசிபலன்

பெண்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காதல் உறவுகளில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். அரசியல் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழிலில் லாபம் உண்டாகும்.

பரிகாரம்: இன்று சிவபெருமானுக்கு கோதுமையால் செய்த பலகாரம் சமர்ப்பிக்கலாம்.

1113
மகர ராசிபலன்

சொத்து மற்றும் கட்டுமானம் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். உறவுகளில் நெருக்கமும் இனிமையும் அதிகரிக்கும். பார்ட்னர்ஷிப் தொழிலில் எச்சரிக்கை தேவை. உங்கள் தனிப்பட்ட திட்டங்களையும் ரகசியங்களையும் அனைவரிடமும் பகிர வேண்டாம்.

பரிகாரம்: பிரதோஷ நேரத்தில் செந்தாமரை மலர் கொண்டு சிவனை வழிபட, அரசாங்க காரியங்கள் சாதகமாகும், பதவிகள் தேடி வரும்.

1213
கும்ப ராசிபலன்

பங்குச் சந்தை அல்லது ரிஸ்க் அதிகம் உள்ள முதலீடுகளில் கவனம் தேவை. வீட்டில் எலக்ட்ரானிக் சாதனம் பழுதடைவதால் சிரமம் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை இருக்கலாம். நேர்மையாக இருங்கள், ஒரு சிறிய தவறு கூட உங்கள் பெயரை கெடுத்துவிடும்.

பரிகாரம்: நந்தி பகவானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்ய பன்னீர் பாட்டில் வாங்கித் தரலாம்.

1313
மீன ராசிபலன்

இந்த நாள் சில சவால்களைக் கொண்டு வரலாம். மற்றவர்களின் பேச்சை ஆராயாமல் நம்ப வேண்டாம். திருமண வாழ்வில் ஒரு பிரச்சினை தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய தொழில் அல்லது பெரிய வேலையைத் தொடங்கும் திட்டத்தை இப்போதைக்குத் தள்ளிப் போடுவது நல்லது.

பரிகாரம்: சிவபெருமானுக்கு மரிக்கொழுந்து சாற்றி வழிபட, வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி லாபம் பெருகும்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ஜோதிடர்களின் கணிப்புகள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தத் தகவல்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். வாசகர்கள் இதை ஒரு தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories