
மேஷம்:
Horoscope 27 2025 Rasi Palan Tamil : எல்லாமே நாம் சொல்வது சரி என்று நினைக்க கூடாது. சில நேரங்களில் உங்கள் பேச்சு தப்பாக போகலாம். இதனால் உங்களது மதிப்பு, மரியாதை குறையாது. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கேட்க வேண்டும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். நாள்தோறும் அனுமன் சாலீசா சொல்ல வேண்டும்.
ரிஷபம்:
யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். எல்லோரிடமும் சகஜமாக பழக வேண்டும். நாம் வாழ்க்கை நம் கையில் தான். உங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
வாழ்க்கை செல்ல செல்ல நட்பு வட்டாரங்கள் விலகி போகும் நிலை உருவாகும். புதிய நட்புகள் கிடைக்கும். பழையதை நினைத்து வருத்தப்படாதீர்கள். வாழ்க்கையைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம். உதவி கேட்பவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது. துர்கா அஷ்டோத்திரம் சொல்ல வேண்டும்.
கடகம்:
பிள்ளைகளிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்க கூடாது. எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. அவர்களை சந்தோஷமாக வளர விட வேண்டும். அவங்க மனசுக்கும் உடம்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு சிவப்பு பூக்கள் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
சிம்மம்:
உங்க முழுத் திறமையையும் பயன்படுத்த வேண்டும். புது வழிகள் தானா வரும். புது வருமான வழிகள் கிடைக்கும். வாழ்க்கி துணையோட அன்பை அனுபவிப்பீர்கள். ராம நாமம் சொல்ல வேண்டும்.
கன்னி:
கஷ்டப்படுவதற்கான பலனை எதிர்பார்க்க கூடாது. அவசரப்பட்டு உடனே எதிர்பார்க்க கூடாது. எப்போது பலன் கொடுக்க வேண்டும் என்று காலம் தான் முடிவு செய்யும். வீட்டில் அமைதி நிலவும். ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம் சொல்ல வேண்டும்.
துலாம்:
உங்களைச் சுற்றி நிறைய நண்பர்கள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று யோசித்துகொள்ள வேண்டும். கெட்ட நண்பர்களின் சகவாசத்தை குறைத்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் கஷ்டப்பட வேண்டி வரும். ஆஞ்சநேய பஜ்ரங் ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
விருச்சிகம்:
உங்களது கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் உங்களை சுற்றி இருப்பவர்கள் கஷ்டப்படுவார்கள். யோகா, தியானம் பண்ண வேண்டும். அருகியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வர வேண்டும்.
தனுசு:
சும்மா கஷ்டப்பட்டு வேலை செஞ்சுக்கிட்டே இருக்காதீங்க. நீங்க பேசாம வேலை மட்டும் செஞ்சா உங்கள பயன்படுத்திக்கறவங்க அதிகமாகிடுவாங்க. உடல்நிலையில கவனம் செலுத்துங்க. பயணத் திட்டங்கள் போடுவீங்க. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துங்க.
மகரம்:
நீங்கள் செய்த தவறு இன்று உங்களை தொந்தரவு செய்யலாம். எதிரிகள் கொஞ்சம் தொல்லை கொடுக்கலாம். அமைதியாக இருக்க வேண்டும். கோபம் கூடாது. குல தெய்வ கோயிலுக்கு சென்று வரவேண்டும்.
கும்பம்:
எவ்வளவு நாளைக்கு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருப்பீங்க? உங்க மௌனத்தால உங்களுக்குத்தான் கஷ்டம். உங்களுக்கு என்ன வேணுமோ அதை நேரடியா கேளுங்க. கெட்டவங்களா ஆகிடுவோம்னு பயப்படாதீங்க. இஷ்ட தெய்வத்தை வேண்டுங்க.
மீனம்:
அவசரப்பட்டு சில வாக்குறுதிகள் கொடுத்திருப்பீங்க. இப்ப அத நேர்த்தி ஆக்குறது கஷ்டம்னு தோணும். சரியான பேச்சுவார்த்தை மூலமா பிரச்சனைகள் தீரும்னு நம்பி முன்னேறுங்க. அனுமன் சாலீசா சொல்ல வேண்டும்.