Oct 18 அதிசார குரு பெயர்ச்சி: துலாம் ராசியின் முக்கிய ஸ்தானத்திற்கு வரும் குரு.! தங்கம் மற்றும் ஆபரணங்கள் குவியும்.!

Published : Oct 17, 2025, 05:41 PM IST

Today Rasi Palan : அக்டோபர் 18, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
அக்டோபர் 18, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, குருபகவான் உங்கள் ராசியின் பத்தாம் இடத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சி ஆவதால், உங்களின் தொழில் மற்றும் உத்தியோகம் சிறப்பாக இருக்கும். தொழிற் ஸ்தானத்தில் குரு இருப்பதால் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரலாம். சமூகத்தில் பெயரும், மதிப்பும் கிடைக்கும். 

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். தொழிலில் எதிர்பாராத வரவுகள் இருக்கும். தொழிலில் எதிரிகள், போட்டியாளர்கள் உங்களிடம் இருந்து விலகிச் செல்வார்கள்.

நிதி நிலைமை:

வருமான ஆதாரங்கள் விரிவடையும். நிதி ஆதாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தங்கம் மற்றும் ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் குறித்து சிந்திக்கலாம். ஆனால் நிதானமாக செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க வேண்டும். செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். குடும்ப விஷயங்களில் அமைதியான சூழல் நிலவும். வீட்டுச் சூழல் இனிமையானதாக மாறும். பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தாய் வழி உறவுகளுடன் பிணைப்பு அதிகமாகும். வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் சிலருக்கு அமையலாம்.

பரிகாரங்கள்:

இன்று குருபகவானை வழிபடுங்கள். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும். கல்விக்கு உதவும் வண்ணம் நோட்டு புத்தகங்கள் வாங்கி மாணவர்களுக்கு அளிக்கலாம். இயலாதவர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories