விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய தினம் அதிசார குரு பெயர்ச்சியின் போது குரு உங்கள் ராசியின் பாக்கிய ஸ்தனமான ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிப்பதால் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். தன்னம்பிக்கை உயரும். புத்துணர்ச்சி உண்டாகும்.
ராஜதந்திரத்துடன் செயல்பட்டு முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீக நாட்டமும், உயர்கல்வி மீதான ஆர்வமும் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும்.
நிதி நிலைமை:
நிதி சார்ந்த விஷயங்களில் நீண்ட காலமாக இருந்து வந்த சிக்கல்களுக்கு மாறுபட்ட கோணத்தில் யோசித்து தீர்வு காண்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை மேம்படும். லாபம் தரும் முதலீடுகளைப் பற்றி சிந்திப்பீர்கள். நிதி விஷயங்களில் நிதானமும், திட்டமிடலும் அவசியம். இன்று பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். அவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தல் போன்ற நல்ல விஷயங்கள் நடைபெறும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
அதிசார குரு பெயர்ச்சி குடும்ப வாழ்க்கையில் அளவில்லாத மகிழ்ச்சியை கொண்டு வரவுள்ளது. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இதன் காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
குரு பெயர்ச்சி என்பதால் இன்று குரு பகவானை வணங்குங்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எலுமிச்சை சாதம் அல்லது கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதமாக வழங்கலாம். முதியவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யலாம். ஏழை மாணவர்களுக்கு கல்விக்காக உதவுவது அல்லது புத்தகங்கள் அளிப்பது நற்பலன்களைக் கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.