சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களுடன் ஆழமான நட்பைக் கொண்டிருக்கிறார். இவர்கள் 30 வயதுக்குப் பிறகு வெற்றியை அடைகிறார்கள். மேலும் அபரிமிதமான செல்வத்தையும் பெறுகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் 'கர்மகாரகன்' என்று அழைக்கப்படுகிறார். அதாவது நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர். அவர் பாரபட்சம் பார்க்காதவர் என்றாலும், சில ராசிகள் அவரது ஆளுமைக்கும், குணநலன்களுக்கும் நெருக்கமாக இருப்பதால் அவருக்கு அந்த ராசிகள் மீது தனி பாசம் உண்டு. சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் எவை என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
25
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சனி பகவான் தர்ம கர்மாதிபதி மற்றும் மிகச்சிறந்த யோககாரகன் ஆவார். ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன், சனியின் உற்ற நண்பர். ரிஷப ராசிக்காரர்கள் நிதானமானவர்கள் மற்றும் விடாமுயற்சி கொண்டவர்கள். சனியின் சோதனைகளைத் தாங்கும் மனப்பக்குவம் இவர்களுக்கு அதிகம் இருப்பதால், சோதனைகளை சாதனைகளாக மாற்ற சனி இவர்களுக்கு உதவுகிறார்.
35
துலாம்
சனி பகவான் உச்சம் அடையும் ராசி துலாம் ஆகும். அதாவது, இந்த ராசியில் அவர் தனது முழு பலத்தையும், நற்பலன்களையும் வழங்குகிறார். துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். துலாம் என்பது தராசை குறிக்கும், இது நீதியை குறிக்கிறது. பாரபட்சம் பார்க்காமல் நியாயமாக நடப்பவர்களை சனிக்கு பிடிக்கும். துலாம் ராசிக்காரர்கள் சமநிலையை விரும்புவதால், இவர்களுக்கு சனி பகவான் ராஜயோக பலன்களை வாரி வழங்குகிறார்.
மகர ராசியின் ஆட்சி நாயகனே சனி பகவான் தான். இந்த ராசிக்காரர்கள் இயற்கையிலேயே கடின உழைப்பாளிகள், பொறுமைசாலிகள் மற்றும் ஒழுக்கமானவர்கள். வீண் ஆர்ப்பாட்டம் இல்லாமல், இலக்கை நோக்கி மெதுவாகவும் உறுதியாகவும் முன்னேறும் இவர்களின் குணம் சனிக்கு மிகவும் பிடிக்கும். அதனால், ஏழரை சனி காலத்திலும் இவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் காப்பார்.
55
கும்பம்
கும்ப ராசியும் சனியின் சொந்த வீடு மற்றும் அவரது மூலத்திரிகோண ராசி ஆகும். கும்ப ராசிக்காரர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள், மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.அறிவுப்பூர்வமாக சிந்திப்பதிலும், சமூக நலனில் அக்கறை கொள்வதிலும் இவர்கள் சிறந்தவர்கள். நேர்மையை விரும்பும் சனி பகவான், இந்த ராசிக்காரர்களுக்கு ஞானத்தையும், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் வழங்குகிறார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)