மார்ச் மாதம் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்.! 5 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி.! அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகுது.!

Published : Feb 23, 2026, 11:57 AM IST

Monthly Horoscope March 2026 : மார்ச் மாதத்தில் கிரக நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படும். இது அனைத்து ராசிகளுக்கும் பலன்களை தரும் என்றாலும், 5 ராசிகள் அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம்.

PREV
16
Monthly Horoscope March 2026

மார்ச் மாதத்தில் கிரக நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படும். இது அனைத்து ராசிகளுக்கும் பலன்களை தரும் என்றாலும், 5 ராசிகள் அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம்.

26
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த மாதம் உங்கள் முழுமையடையாத பணிகள் முடிவடையும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயர்வாக இருக்கும்.

36
ரிஷபம்

மார்ச் மாதத்தில் பல கிரகங்களின் சேர்க்கையால், ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண்பீர்கள்.

46
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் பல சாதனைகளைப் புரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் பெரிய வெற்றிகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும்.

56
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டம் கூடிவரும். உங்கள் தன்னம்பிக்கை, அந்தஸ்து மற்றும் கௌரவம் உயரும். பணியிடத்தில் உங்கள் பணிக்கு பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.

66
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வீடு, வாகனம், சொத்து வாங்கும் யோகம் கைகூடும். தொழில் துறையில் சாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். இந்த மாதம் லாபத்திற்கான ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories