October Month rasi palangal: ஜோதிட சாஸ்திரங்களின்படி அக்டோபர் மாதத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாக உள்ளன. இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்களின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களது ராசியை மாற்ற இருக்கின்றன. சூரியன், சுக்கிரன், குரு பகவான், செவ்வாய், புதன் போன்ற சுப கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்பட உள்ளன. கிரகங்களின் இந்த மாற்றங்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். மேலும் கிரகங்கள் பெயர்ச்சியாகும் பொழுது பிற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகங்களையும் உருவாக்குகின்றன.
அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் ஆதித்ய மங்கள ராஜயோகம், ஹன்ஸ் ராஜயோகம், ருச்சக ராஜயோகம் போன்ற முக்கிய மூன்று ராஜ யோகங்கள் உருவாகி மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரவுள்ளன. இந்த ராஜயோகங்களால் பலன் பெறும் ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
மிதுனம்
அக்டோபரில் உருவாகும் மூன்று ராஜயோகங்களால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய இருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடுகளில் பொன், பொருள், தங்கம் சேரும். புதிய கட்டிடம், வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். அக்டோபர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்க இருக்கிறது.
34
விருச்சிகம்
அக்டோபரில் உருவாகும் 3 ராஜயோகங்களால் விருச்சக ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெற உள்ளனர். இத்தனை நாட்களாக இவர்களுக்கு இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சி பிறக்கும். இவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கி, அதிக பண வரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீங்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். கிரகங்களின் ஆசியால் பணவரவு குவியும்.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் பெயர்ச்சி வெளிநாடு மற்றும் வெளியூர் செல்லும் யோகத்தை கொடுக்க இருக்கிறது. சட்டரீதியாக போராடி வருபவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். விவாகரத்து வரை சென்ற வழக்குகள் கூட மனமாற்றம் ஏற்பட்டு சுமுகமாக முடியும். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு பொன், பொருள், தங்கம் வாங்கும் யோகம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி பொங்கும். அக்டோபர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)