These Nakshatra Face More Hardships in Life: ஜோதித்தின்படி, சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சிறுவயதில் இருந்தே கஷ்டங்கள் அதிகமாக இருக்கும். ஒரு கஷ்டம் முடிந்தவுடன் மற்றொரு கஷ்டம் காத்திருக்கும். அந்த நட்சத்திரங்கள் எவை என்று பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக சில நட்சத்திரங்களுக்குச் சில காலங்களில் சோதனைகள் வருவது இயல்புதான். ஆனால், குறிப்பிட்ட 4 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கஷ்டத்தை மட்டுமே அனுபவிப்பார்கள். அந்த நட்சத்திரங்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
25
சதயம்
சதய நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவின் தாக்கத்தால் வாழ்வில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இவர்கள் தனிமையை அதிகமாக உணர்வார்கள். அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்கு சிரமங்கள் இருப்பது உண்மைதான் என்றாலும், தங்களது புத்திசாலித்தனத்தை கொண்டு அனைத்தையும் முறியடிக்க வெற்றி பெறுவார்கள்.
35
ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் கஷ்டங்கள் அதிகமாக இருக்கும். ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் ஆவார். இவர்கள் அடிக்கடி நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளாவார்கள். குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இவர்கள் பிறரின் துன்பங்களையும் தன் துன்பமாக கருதுவார்கள். இதுவே இவர்களுக்கு சில சமயங்களில் எதிராக திரும்பும். தேவையில்லாத சிக்கல்களில் அடிக்கடி மாட்டிக் கொள்வது இவர்களின் வழக்கம்.
பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இருப்பினும் இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான சோதனைகளை சந்திப்பார்கள். கடின உழைப்புக்கு மட்டுமே பலன் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக பொறுப்புணர்வும், கடமைகளும் இருக்கும். இவர்களுக்கு எதுவுமே எளிதில் கிடைத்துவிடாது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு குறைவாகவே இருக்கும். சிறிய விஷயங்களை கூட பெரிய முயற்சி செய்தே பெற வேண்டியதாக இருக்கும்.
55
கேட்டை
கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதிலேயே பெரிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்ப பாரத்தை சிறு வயதில் இருந்தே சுமக்கத் தொடங்கி விடுவார்கள். தனக்கென வாழாமல் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்காகவும் தன்னை நம்பி இருக்கும் உயிர்களுக்காகவே முழு வாழ்வையும் அர்ப்பணிப்பார்கள். இதற்காக அவர்கள் கடினமாக உழைப்பார்கள். இருப்பினும் வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களையும், கஷ்டங்களை மட்டுமே சந்திப்பார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)