Diwali 2024 Rajayoga Rasi Palan: தீபாவளி கொண்டாட்டம் (Diwali 2024 Celebration) தொடங்கிவிட்டது. பண்டிகை (Festival) நேரத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் பண்டிகை கொண்டாட்டம் இரட்டிப்பாகும். நமது ராசியில் ஏற்படும் மாற்றம் நமது வாழ்க்கையின் சுக - துக்கங்களுக்குக் காரணமாகிறது. இத்தனை நாள் ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்து வந்த சில ராசிகளின் அதிர்ஷ்டம் இன்றிலிருந்து மாறுகிறது. வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை 6 ராசிகள் ஜாக்பாட் அடிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு விமோசனம் கிடைக்கும். மகிழ்ச்சி, நிம்மதி வீட்டு வாசலில் வந்து நுழையும். அந்த 6 ராசிக்காரங்க யாரெல்லாமெ என்று பார்க்கலாம் வாங்க…
24
Diwali 2024 Rasi Palan, Horoscope
மேஷம், விருச்சிகம் (Aries, Scorpio): நவம்பர் 5 வரை மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்கள். இது அவர்களுக்கு மிகவும் சுப நேரம். உங்கள் திட்டமிட்ட பணிகள் நிறைவேற அதிக வாய்ப்புள்ளது. குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மனஸ்தாபம் குறையும். எதிரிகளை வென்று, நிம்மதியைக் காண்பீர்கள்.
கடன் திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், உங்கள் வேலையில் பதவி உயர்வு பெற அதிக வாய்ப்புள்ளது. லாட்டரி அடித்தது போல் ஒரே இரவில் மில்லியனர் ஆகும் வாய்ப்பு அதிகம். வியாபாரத்தில் கூட்டாண்மையால் நீங்கள் நல்ல லாபம் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் ஈடுபடுவது அதிகரிக்கும். தொழிலில் புதிய யோசனைகளுக்கு இது சரியான நேரம், மாற்றம் உங்கள் கையைப் பிடிக்கும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க மறக்காதீர்கள்.
ரிஷபம் மற்றும் கும்பம் (Taurus and Aquarius): தீபாவளி ரிஷபம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வரும். உயர் அதிகாரிகளுடன் உங்கள் நல்லுறவு வலுப்படும். நேர்மையாக அவர்கள் உங்களுடன் இருந்து, கடினமான சூழ்நிலையை சமாளிக்க உங்களுக்கு உதவுவார்கள். இந்த இரண்டு ராசிகளுக்கும் வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களின் வாழ்க்கையில் வண்ண பட்டாசு வெடிக்கும்.
புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய யோசனைகளைச் சிந்திக்கவும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் இது சரியான நேரம். விருந்தினர்களின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அவர்களால் லாபம் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், இது எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும்.
துலாம் மற்றும் சிம்மம் (Libra and Leo): துலாம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களும் இந்த நாட்களில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். அவர்களின் எல்லா கஷ்டங்களும் நீங்கும். நல்ல இடத்தில் பணத்தை முதலீடு செய்ய இது சரியான நேரம். அதேபோல், தொழிலில் முன்பை விட அதிக லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
வருமானத்தின் புதிய வழிகள் உங்களுக்குக் கிடைக்கும். போட்டித் தேர்வு எழுதியவர்களுக்கோ அல்லது எழுதப் போகிறவர்களுக்கோ இது சுப நேரம். மாணவர்கள் தங்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.