Budhan Peyarchi: ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். இதனால் அடுத்த 10 நாட்களுக்கு இந்த 5 ராசிக்காரர்களுக்கு புதனின் ஆசியுடன் ராகுவின் தாக்கமும் இணைந்து தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் அசுர வளர்ச்சியை அள்ளித்தரப் போகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களில் புதன் முக்கிய இடத்தில் உள்ளது. குறிப்பாக புத்தி கூர்மை, சாதுரிய பேச்சு, வணிக நுணுக்கம், தகவல் தொடர்புத் திறன்கள் அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். புதன் தனது ராசியையோ அல்லது நட்சத்திரத்தையோ மாற்றும் போது மனிதர்களின் வாழ்வியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
27
புதன் பகவானால் எந்தெந்த ராசிக்கு நன்மை
அந்த வகையில், ராகுவின் ஆதிக்கத்தைக் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்திற்குள் புதன் பகவான் நேற்று அதிகாலை 6:14 மணிக்கு நுழைந்துள்ளார். வரும் ஜூன் 11 2026 வரை புதன் இதே நட்சத்திரத்தில் நீடிக்கிறார். இந்த 10 நாட்களும் புதனின் ஆசியோடு ராகுவின் நிழல் தாக்கமும் இணைந்து 5 ராசிக்காரர்களுக்கு அசுர வளர்ச்சியை அள்ளித்தரப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
37
மேஷம் - நிதானமும் மனமகிழ்ச்சியும்
புதனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்யும். நீங்கள் எடுக்கும் விவேகமான முடிவுகள் உங்களுக்குப் பாராட்டுகளையும் நன்மைகளையும் தேடித்தரும். உடல் ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பு இருக்கும். குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீண்ட நாட்களாக இருந்த மனக்கசப்புகள் நீங்கி, மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு இந்த 10 நாட்கள் அனுகூலமான நன்மைகளை கொடுக்கும். வேலைப்பளு காரணமாகக் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் இருந்த நிலை மாறும். மனைவியின் குறைகளை போக்கி ஒற்றுமை பலப்படும். கூட்டு வியாபாரத்தில் கவனமாக இருப்பதால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். தொழில் விரிவடையும், பிள்ளைகளால் மகிழ்ச்சி பெருகும்.
57
கன்னி - உத்தியோக உயர்வு மற்றும் நிம்மதி
கன்னி ராசிக்கு இந்த புதன் பெயர்ச்சியால் லாபகரமானதாக இருக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் , எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உங்கள் கடின உழைப்பைக் கண்டு மேலதிகாரிகள் வியந்து பாராட்டுவார்கள். நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பணிமாறுதல் கிடைக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகள் நல்வழிக்குத் திரும்புவதால் பெற்றோரின் நீண்ட நாள் கவலைகள் தீரும்.
புதன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய நிம்மதியைத் தரும் காலகட்டம். எதிர்பாராத பணவரவு மூலம் உங்களின் வருமானம் திடீரென உயரும். இதனால் நீண்ட நாள் கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். தொழில் செய்வோர் தங்கள் எதிரிகளைத் தோற்கடிப்பதில் வெற்றி பெறுவார்கள். உங்களுக்குப் பின்னால் சதி செய்த மறைமுக எதிரிகளை அடையாளம் கண்டு முறியடிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.
77
மகரம் - இலக்குகளை எட்டும் லட்சிய காலம்
மகர ராசிக்காரர்களுக்குத் தங்களின் திறமைகளை நிரூபிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய உத்திகளைக் கையாண்டு எதிரிகளைத் தவிடுபொடியாக்குவார்கள். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள். வேலைகளில் உள்ளவர்கள் எவ்விதத் தவறும் இன்றி, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இலக்குகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்துச் சாதனை புரிவார்கள்.