Thai Matha Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Thai Matha Rasi Palan 2026 Simmam: ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆறாம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் சஞ்சாரம் சாதகமற்ற சூழலை உருவாக்குகிறது. எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ வேண்டிய சூழல் ஏற்படலாம். உறவினர்களிடம் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். வீடு, இடம் வாங்குவது, மணி விழா, சுபகாரியங்கள் நடத்துவது போன்றவற்றின் மூலம் வீண் விரயங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். சனியின் பார்வை இருப்பதால் ஆரோக்கியத்தில் தொல்லை அதிகரிக்கும்.
25
குரு சஞ்சார பலன்கள்:
மிதுன ராசியில் வக்ர நிலையில் குரு பகவான் பயணித்து வருகிறார். உங்கள் ராசியின் 5, 8 ஆகிய வீடுகளின் அதிபதியான அவர் வக்ரம் பெற்றிருப்பதால் பிள்ளைகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கலாம். எடுக்கும் காரியங்களில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் செய்யும் உதவிகள் உபத்திரத்தில் முடியலாம். பிள்ளைகள் மூலமாகவும் பிரச்சனைகள் அலைமோதும். வியாபாரத்தில் நண்பர்களால் இழப்புகள் ஏற்படலாம்.
குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய வீடுகளில் விழுகிறது. பஞ்சம ஸ்தானம் குருவின் வீடாகும். குரு வீட்டை குருவே பார்ப்பது யோகத்தை தரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் பலன்கள் இப்போது கிடைக்க தொடங்கும். இருந்தாலும் தேவையற்ற மனக்கசப்புக்களும், குழப்பங்களும் வந்து சேரும். பிறரை நம்பி காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். சில காரியங்கள் தாமதமாக முடிந்தாலும் இறுதியில் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். சுப செலவுகள் செய்வதன் மூலம் தேவையற்ற விரயங்களை தவிர்க்கலாம்.
35
புதன் சஞ்சார பலன்கள்:
புதன் பகவான் சிம்ம ராசியின் 2, 11 ஆகிய வீடுகளின் அதிபதியாவார். அவர் ஏழாம் வீடான சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கை துணைக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். வேலைக்காக விண்ணப்பித்திருப்பவர்களுக்கு அழைப்பிதழ் கிடைக்கக்கூடும்.
தொழில் தொடங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் காலமாக இருக்கும். மைத்துனர் அல்லது மாமனார் வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உறவு மேம்படும். அவர்களது இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டில் தொடர்ச்சியாக நல்ல விஷயங்களும், சுப காரியங்களும் நடைபெறும்.
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் பிப்ரவரி 7ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறும். பழைய தொழிலை நிறுத்திவிட்டு புதிய தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். பிள்ளைகளின் கனவுகள் நனவாகும்.
பெண் குழந்தைகளுக்கு திருமண யோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய கூட்டாளிகள் கிடைக்கலாம். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப செலவுகள் அதிகரிக்கும்.
55
பரிகாரங்கள்:
கும்பகோணத்தில் அமைந்துள்ள சூரியனார் கோயிலுக்கு சென்று வருவது நல்லது. சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வதன் நன்மை தரும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது அஷ்டம சனியின் தாக்கத்தைக் குறைக்கும். ஏழை, எளியவர்களுக்கு கோதுமை அல்லது அரிசியை தானமாக வழங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)