
Thai Matha Rasi Palan 2026 Kadagam: விரய ஸ்தானத்தில் குரு பகவானும், அஷ்டம ஸ்தானத்தில் சனியும், ராகுவும் பலம் பெற்று அமர்ந்து இருக்கின்றனர். சமசப்தம ஸ்தானத்தில் கூட்டு கிரகங்களின் யோகம் உள்ளது. இந்த கிரக நிலைகள் காரணமாக விரயங்கள் அதிகரிக்கலாம். பணியிட மாற்றம், வீடு மாற்றம் போன்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும். வீண் விரயங்களை தவிர்த்து சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வது, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/thai-matha-rasi-palan-2026-thai-matha-mithuna-rasi-palangal-in-tamil-5km4egy?photo=2
இந்த மாதம் முழுவதும் குரு பகவான் மிதுன ராசியில் வக்ர நிலையிலையே சஞ்சரிக்கிறார். கடக ராசியின் ஆறு மற்றும் ஒன்பதாம் இடங்களின் அதிபதியாக இருக்கும் அவர் வக்ரத்தில் இருக்கும் பொழுது நன்மை தீமை ஆகிய இரண்டும் கலந்தே கிடைக்கும். ஆறாம் இடத்தின் அதிபதி 12ஆம் வீட்டில் வக்ரம் பெறுவதால் ‘விபரீத ராஜயோகம்’ ஏற்படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் திடீரென எண்ணங்களும், செயல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.
குருவின் பார்வை 4,6,8 ஆகிய வீடுகளில் விழுகிறது. இதன் காரணமாக தாய் வழி ஆதரவு கிடைக்கும். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நலக்கோளாறுகளில் இருந்து விடுபடுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்காக ஏற்றுக் கொண்ட பொறுப்பை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு இடையூறாக இருந்த உயர் அதிகாரிகள் மாறுதல் பெற்று சென்று விடுவார்கள். தொழிலுக்குத் தேவையான மூலதனம் நண்பர்கள் மூலம் கிடைக்கும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடக ராசியின் 3, 12 ஆகிய வீடுகளின் அதிபதியான புதன் பகவான் 29-01-2026 அன்று அஷ்டம ஸ்தானத்தில் மறைகிறார். ‘கெட்டவன் கெட்டதில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவதன் காரணமாக பொற்காலம் தொடங்க இருக்கிறது. ஆடை, ஆபரண சேர்க்கை நடைபெறும். புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வாழ்க்கையில் பல புதிய திருப்பங்களை சந்திப்பீர்கள்.
சகோதரர்கள் வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமையும் பாசப்பிணைப்பும் காணப்படும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் நல்ல பொறுப்புகள் கிடைக்கலாம்.
மாதத்தின் தொடக்கத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிர பகவான் பிப்ரவரி 7 கும்ப ராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக நன்மை தீமை இரண்டும் கலந்தே கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். தொழிலில் வேலையாட்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம். பணி மாற்றம் செய்ய விரும்பினால் அது நடக்காமல் போகும்.
வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நேரம் ஆகும். தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் காணப்படும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. மாணவர்களுக்கு மறதி அதிகரிக்கலாம். பெண்களுக்கு குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம். எனவே விட்டுக்கொடுத்து செல்வதும், அமைதியாக இருப்பதும் உத்தமம்.
திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவது மன அமைதியைத் தரும். பிரதோஷ காலங்களில் கிரிவலம் செய்வது உத்தமம். பௌர்ணமி தினத்தில் அம்மன் கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இயன்றவர்கள் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசித்து வருவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவது நேர்மறை பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)