Chaturgrahi Rajyog 2025: விருச்சிக ராசியில் விரைவில் 4 சுப கிரகங்களின் இணைப்பு நடைபெற உள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் சந்திர பகவான் வேகமாக நகரும் கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை நாட்கள் வரை தங்கியிருக்கிறார். சந்திரனின் ராசி மாற்றத்தின் பொழுது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. ஏற்கனவே செவ்வாய், புதன் ஆகியோர் விருச்சிக ராசியில் உள்ளனர். நவம்பர் 16 ஆம் தேதி முதல் சூரிய பகவானும் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
25
விருச்சிகத்தில் இணையும் சுப கிரகங்கள்
இந்த நிலையில் நவம்பர் 20 ஆம் தேதி சந்திரனும் விருச்சிக ராசியில் நுழைகிறார். இதன் காரணமாக சதுர்கிரக யோகம் உருவாகிறது. சந்திரன் செவ்வாய் கிரகத்துடன் இணைந்து மகாலட்சுமி யோகத்தையும், சூரிய பகவானுடன் இணைந்து சசி ஆதித்ய யோகத்தையும், புதன் பகவானுடன் இணைந்து புதன் சந்திர யோகத்தையும் உருவாக்குகிறார். இதன் காரணமாக நவம்பர் 20 தொடங்கி சில ராசிக்காரர்கள் சிறப்பு நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
35
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகம் உருவாவது மிகுந்த நன்மை பயக்கும். சூரியன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகியோர் விருச்சிக ராசியின் லக்னத்தில் இணைந்துள்ளனர்.
கூடுதலாக கடகத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் செவ்வாய் மற்றும் சந்திரனை பார்க்கிறார். இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
செல்வமும், செழிப்பும் கணிசமாக அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். ஏழ்மை நீங்கி செல்வந்தராகும் வாய்ப்புகள் கிடைக்கும்.
நிதி நிலைமை வலுவடையும். கணிசமான செல்வத்தை குவிப்பீர்கள். பதவி மற்றும் கௌரவத்தை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தொழில் செய்து வருபவர்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டமாகும்.
துலாம் ராசியின் லக்ன ஸ்தானத்தில் அசுரர்களின் குருவான சுக்கிரனும், பத்தாவது வீட்டில் குரு பகவானும் அமர்ந்துள்ளனர். இது ஏற்கனவே சுபமாக அறியப்படும் நிலையில் இரண்டாவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது.
இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் கலை, அழகு, படைப்பாற்றல் ஆகிய துறைகளில் நன்மையைப் பெறுவீர்கள். செவ்வாய் சூரியன், சந்திரன் மற்றும் புதன் ஆகியவற்றின் சேர்க்கை தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அதிகரிக்கக்கூடும்.
திடீர் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உண்டு. நல்ல திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வீர்கள்.
புதிய தொழிலை தொடங்க திட்டமிட்டபவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும்.
சூரியனின் செல்வாக்கு மிக்க நிலை அரசு வேலை வாய்ப்பு அல்லது அரசாங்க நிதி உதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
55
ரிஷபம்
ரிஷப ராசியின் ஏழாவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதன் விளைவாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள்.
வீடு கட்டுதல், வீடு மராமத்து போன்ற தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி வேகமாக அதிகரிக்கும். மனம் மற்றும் உடல் ரீதியான அழுத்தங்கள் நீங்கும்.
நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறுகள் முடிவுக்கு வரும். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் எதிர்பார்க்கப்படும்.
வேலை நிமித்தமாக செல்லும் பயணங்கள் மூலம் நிதி ஆதாயங்கள் உண்டாகும். வாழ்க்கை துணையுடனான உறவு நன்றாக இருக்கும்.
நிதி நிலைமை உயர்வதால் வங்கி இருப்பு கணிசமாக உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)