எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதியில் பிறந்த பெண்கள் மர்மமான குணம் கொண்டவர்கள். எல்லாவற்றையும் அவர்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று இங்கு பார்க்கலாம்.
எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை, குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலத்தை கண்டறிய முடியும். அந்த வகையில் சில குறிப்பிட்ட தேதியில் பிறந்த பெண்கள் ரகசிய குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். எதையும் வெளிப்படையாக பேச மாட்டார்களாம். எல்லாவற்றையும் ரகசியமாக வைத்திருப்பார்களாம். அத்தகையவர்கள் எந்தெந்த தேதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
எண் 7
எந்தவொரு மாதத்திலும் 7, 16, 25 தேதிகளில் பிறந்த பெண்களின் ரேடிக்ஸ் எண் 7 ஆகும். எண் கணிதப்படி, இவர்களிடம் கேதுவின் தாக்கம் அதிகம். இதனால் இவர்கள் ரகசியங்களை காப்பார்கள். இவர்களின் எண்ணங்கள் ஆழமானவை.
35
எண் 7 கொண்ட பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?
ரேடிக்ஸ் எண் 7 கொண்ட பெண்கள் புத்திசாலிகளாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதாக செய்வார்கள். சவால்களை அமைதியாக கடப்பார்கள். உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள்.
இவர்கள் தங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்தி, கடினமாக உழைப்பார்கள். அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள். இதனால் குடும்பம், சமூகத்தில் மரியாதை பெறுவார்கள். மற்றவர்களுடன் அதிகம் பழக விரும்ப மாட்டார்கள்.
55
நண்பர்கள் குறைவு
ரேடிக்ஸ் எண் 7 கொண்ட பெண்களுக்கு நண்பர்கள் குறைவு. ஆனால், சில நண்பர்களிடம் நேர்மையாகப் பழகுவார்கள். உறவுகளில் நம்பிக்கை இவர்களுக்கு முக்கியம். முழுமையாக நம்பினால் மட்டுமே ரகசியங்களைப் பகிர்வார்கள்.