கார்த்திகை மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களும், நல்ல முன்னேற்றங்களும் கிடைக்கும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் நடக்கும் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உங்களுக்கு சாதகமாக அமைகின்றன.
கிரக நிலைகள்:
மாதத்தின் தொடக்கத்தில் தொழில் ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான், மாதத்தின் மத்தியில் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மாத தொடக்கத்தில் பலத்துடன் இருக்கும் குரு பகவான் ஐந்தாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பதால் பண வரவு உண்டாகும். மாத தொடக்கத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் சுக்கிரன் பின்னர் பதினொன்றாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார்.
பொதுவான பலன்கள்:
இந்த மாதம் உங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், புத்துணர்ச்சி நிறைந்ததாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் வாய்ப்புகள் உண்டு. உங்களின் நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். வசதிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாதத்தின் பிற்பகுதியில் கிரக பெயர்ச்சிகள் சாதகமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய திட்டத்தை ஆரம்பிக்க நல்ல நேரமாகும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையைப் பொறுத்தவரை மிகவும் அனுகூலமான மாதம். மாதத்தின் முதல் பாதியில் வருமானம் அதிகரிப்பதற்கான சூழல் உண்டாகும். குருவின் பார்வை மற்றும் சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரின் லாப ஸ்தான வீட்டின் சஞ்சாரம் காரணமாக பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் ஏதாவது ஒரு வழியில் பூர்த்தி செய்யப்படும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். நிலம் தொடர்பான வேலைகளில் லாபம் கிடைக்கும்.
வேலை மற்றும் தொழில்:
வேலை மற்றும் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகம் மற்றும் தொழிலில் இருந்த தடைகள் நீங்கி ஏற்றம் கிடைக்கும். வணிகர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் ஆரம்பத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மாதத்தின் பிற்பகுதியில் நல்ல லாபம் கிடைக்கும். சூரியன் 11 ஆவது வீட்டிற்கு பெயர்ச்சியான பின்னர் வியாபாரத்தின் மூலம் எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப வாழ்க்கை பொதுவாக இணக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி அவர்களின் கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்படும். திருமண உறவுகளில் இருந்த பதற்றம், முரண்பாடுகள் நீங்கும். மூன்றாம் நபர்களின் தலையிட்டை தவிர்ப்பது நல்லது. காதல் உறவுகளுக்கு மாதத்தின் ஆரம்பம் நன்றாக இருக்கும். பிற்பகுதியில் கவனம் தேவை.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மாதமாக இருக்கலாம். சனி மற்றும் குருவின் பார்வை காரணமாக உடல் நிலையில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். எனவே போதுமான ஓய்வு தேவை. மாணவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். இத்தனை நாட்களாக உங்களின் உழைப்பு வீண் போகாது.
பரிகாரங்கள்:
வருகிற தடைகளிலிருந்து விடுபடுவதற்கு விஷ்ணு பகவானை வழிபடுவது நல்லது. தினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது பலன்களை அதிகரிக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது நேர்மறை பலன்களை கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)