Astrology: சில தினங்களில் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி.! அளவில்லாத நன்மைகளைப் பெறப்போகும் ராசிகள்.!

Published : Dec 01, 2025, 02:17 PM IST

Sun Transit 2025: டிசம்பர் 3, 2025 நடக்கவிருக்கும் சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி பற்றியும், அதனால் பலன் பெறக்கூடிய ராசிகள் பற்றியும் இங்கே விரிவாக காணலாம். 

PREV
15
சூரியன் நட்சத்திரப் பெயர்ச்சி 2025

வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்கியிருக்கிறார். அவரின் ராசி மாற்றத்தின் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அதேபோல அவர் ஒரு நட்சத்திரத்தில் சுமார் 13 முதல் 15 நாட்கள் வரை சஞ்சாரம் செய்வார். இந்த நிலையில் அனுஷ நட்சத்திரத்தில் பயணித்து வரும் அவர், டிசம்பர் 3, 2025 புதன்கிழமை அதிகாலை 01:23 மணியளவில் புதன் பகவானின் சொந்த நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சியின் முக்கியத்துவம்

சூரியன் தனது நண்பனான புதன் பகவானுக்கு சொந்தமான கேட்டை நட்சத்திரத்திற்கு மாறுவது ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாகவும், சுப பலன்களை வழங்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சி ஒரு தனி நபரின் தொழில், வருமானம், சமூகத்தில் மதிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி காரணமாக அதிக நன்மைகளைப் பெறக்கூடிய சில ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி பல வழிகளில் நன்மையை வழங்கவுள்ளது. தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது சிறந்த காலமாகும். அதிருப்தியில் வேலை பார்த்து வருபவர்களுக்கு புதிய இடத்தில் கை நிறைய ஊதியத்துடன் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்களின் திறமைகள் பாராட்டப்பட்டு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவிலிருந்து மனஸ்தாபங்கள் நீங்கும். திருமணத் தடைகள் நீங்கி சுப செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி காண்பார்கள்.

35
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி காரணமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஏற்கனவே செய்து வரும் தொழிலில் போதுமான வருமானம் கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வுகளைக் காண்பீர்கள். குடும்பத்தின் நிதி தேவைகளை சிறப்பாக நிர்வகிப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். சாமர்த்தியம் மற்றும் புத்திசாலித்தனம் கொண்டு எதிரிகளை தோற்கடிப்பீர்கள்.

45
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பாராட்டுகள் குவியும். பதவி உயர்வு மற்றும் சமூகத்தில் உயர் பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய தவறான புரிதல்கள் நீங்கி உங்களின் மதிப்பு உயரும். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் இருந்து வந்த தகராறுகள் தீர்க்கப்படும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கலாம். நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து இருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

55
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிக அளவில் பணம் குவியும் காலகட்டமாக இருக்கும். நிலுவையில் இருந்த பணங்கள் கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரலாம். பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் மூலம் நல்ல லாபம் ஈட்டலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories