Astrology: சூரியன், சுக்கிரன் பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு பணமழை கொட்டப் போகுது. அவை எந்தெந்த ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
ஜோதிடசாஸ்திரத்தின்படி கிரகங்களின் நகர்வுகள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவக்கிரகங்களின் தலைவனான சூரிய பகவானும், செல்வ வளத்தின் அதிபதியான சுக்கிர பகவானும் ஒரே நாளில் தங்களது நட்சத்திரங்களை மாற்றவிருக்கும் அரிய நிகழ்வு ஜூன் 22-ம் தேதி அதாவது இன்று நிகழ்கிறது.
இப்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், ராகுவின் ஆதிக்கப் பெற்ற திருவாதிரை நட்சத்திரத்திற்கு இடம் பெயர்கிறார். அதே வேளையில், கடக ராசியில் பயணிக்கும் சுக்கிரன், புதனின் ஆதிக்கப் பெற்ற ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். ஒரே நாளில் இந்த இரு முக்கிய கிரகங்களும் நட்சத்திரப் பெயர்ச்சி அடைவது ஜோதிட ரீதியாக மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக 3 ராசிகளுக்கு பணமழை பொழிந்து அதிர்ஷ்டம் கொட்ட போகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
25
துலாம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசியினருக்கு இந்த நட்சத்திர மாற்றம் அசுர வளர்ச்சியை கொடுக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து திடீர் பண வரவு உண்டாகும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும். உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவோடு நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பதோடு, லாபமும் இரட்டிப்பாகும். அவசரப்பட்டு எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
35
மகரம்
சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த மகர ராசியினருக்கு நிலுவையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரும். தொழில் அதிபர்கள் தங்களது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சாதகமான சூழல் அமையும். முந்தைய முதலீடுகள் மூலம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கைசேரும். தம்பதியரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் கூடும். நீண்ட நாட்களாகத் தகுந்த வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, மனதிற்குப் பிடித்த வாழ்க்கைத்துணை அமைவதற்கான யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்டத்தின் முழுமையான பலனை அனுபவிக்கப் போகும் ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று. உங்களது தனித்திறமைகளும், பேச்சுச் சாதுரியமும் மற்றவர்களைக் கவரும் வகையில் மாறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளைச் சரியான நேரத்தில் முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். புதிய வருமான ஆதாரங்கள் பெருகும். எனினும், கையில் பணம் புழங்குகிறது என்பதற்காக வீண் ஆடம்பரச் செலவுகள் செய்வதைக் குறைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
55
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.