Astrology: துலாத்தில் சூரியன்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொட்டப் போகுது!

Published : Oct 22, 2026, 07:01 AM IST

Astrology: சூரியனின் துலாம் ராசிப் பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ஆகிய 4 ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்கவுள்ளது. உத்தியோகம், வியாபாரம் மற்றும் பொருளாதாரத்தில் சிறப்பு பலன்கள் உண்டாகும்.

PREV
15
சூரியனின் துலாம் ராசிப் பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தலைவராக விளங்கும் சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். அந்த வகையில், அக்டோபர் 17 அன்று கன்னி ராசியில் இருந்து வெளியேறி, சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த துலாம் ராசிக்குள் சூரியன் நுழைந்துள்ளார். நவம் 16, 2026 வரை அவர் இதே ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.

ஆளுமை, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு மற்றும் அரசுத்துறைக்கு காரகனான சூரியன், கலை, அழகு, ஆடம்பரம் மற்றும் உறவுகளுக்குரிய சுக்கிரனின் ராசியில் இணைவது மிகவும் சிறப்பான ஜோதிட நிகழ்வாகும். சூரியனின் இந்த சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிகள் மகத்தான பலன்களைப் பெறப் போகின்றன என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

25
1. ரிஷபம்

சுக்கிரனின் சொந்த ராசியான ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகச் சிறந்த பலன்களை வாரி வழங்கப் போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் உயர்வுக்கான வாய்ப்புகளும் தேடிவரும். நீண்ட நாளாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வருமான மூலங்கள் உருவாகும். பொருளாதார நிலை முன்பை விட மிகவும் வலுவடையும். சொத்து அல்லது புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

35
2. சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியே சூரிய பகவான் என்பதால், இந்த பெயர்ச்சி இவர்களுக்கு அபரிமிதமான தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தரும். நீங்கள் தொடங்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் மாபெரும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கும் நிபுணர்களுக்கும் இது உகந்த கால கட்டமாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவர். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவிலான லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

45
3. துலாம்

உங்கள் ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதால், உங்களின் தனிப்பட்ட ஆற்றலும் தலைமைப் பண்பும் பன்மடங்கு அதிகரிக்கும். சமுதச்சில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். அரசாங்கம் சார்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு அல்லது சலுகைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். திருமண வாழ்க்கையில் இருந்த சின்ன மனஸ்தாபங்கள் நீங்கி, பரஸ்பர புரிதல் மேம்படும்.

55
4. மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் உத்தியோக ரீதியான உன்னத பலன்களை இந்த சூரிய பெயர்ச்சி வழங்குகிறது. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும், மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். முடங்கிப் போன முக்கியமான திட்டங்கள் மீண்டும் உயிர் பெறும். வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்கவோ அல்லது பெரிய முதலீடுகளைச் செய்யவோ இது நல்ல தருணம். தேவையற்ற செலவுகள் குறைந்து, செல்வத்தை வெற்றிகரமாகச் சேமிப்பீர்கள். உடல் ஆரோக்கியமும் மன உறுதியும் சிறப்பாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஜோதிடக் தகவல்கள் மற்றும் பலன்கள் பொதுவான நம்பிக்கைகள், பாரம்பரிய ஜோதிட விதிமுறைகள் மற்றும் கிரகங்களின் நிலைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை மட்டுமே. இவை எந்தவொரு சூழ்நிலையிலும் தனிப்பட்ட முறையிலான ஜோதிட, சட்ட, மருத்துவ அல்லது நிதி சார்ந்த உறுதியான ஆலோசனையாக கருதப்படக்கூடாது. வாசகர்கள் தங்களின் சொந்த முடிவுகள், கணிப்புகள் அல்லது நடைமுறைச் செயல்களுக்கு தாங்களே முழுப் பொறுப்பாவார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories