Sun Transit in Anusham Nakshatra: நவம்பர் 19 ஆம் தேதி சூரிய பகவான் விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரக்கூடும்.
அனுஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான்
வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் மிகவும் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். கிரகங்களின் ராஜாவாக அறியப்படும் அவர் நவம்பர் 16 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்து இருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி அவர் விசாக நட்சத்திரத்தை விட்டு வெளியேறி அனுஷ நட்சத்திரத்திற்குள் நுழைவார். அங்கு டிசம்பர் 2, 2025 வரை இருப்பார். இது சில ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்களை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
மிதுனம்
சூரியனின் இந்த நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரங்களுக்கு நன்மை பயக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் விரிவாக்கம் செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கலாம். வணிகத்தில் லாபம் ஈட்டுவதற்கான அறிகுறிகளும் உண்டு. கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். லாபத்திற்கான கதவுகள் திறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சூழல் உருவாகும். தந்தை வழி உறவு நன்றாக இருக்கும்.
34
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். நிதி ரீதியாக சாதகமான காலகட்டம் ஆகும். உங்கள் வருமானம் அதிகரிப்பதன் மூலம் வாழ்க்கையில் செழிப்பை கொண்டு வரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். தொழிலும் வெற்றி பெறுவீர்கள். வேலையில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாள் கனவுகள், ஆசைகள் நிறைவேறத் தொடங்கும். நிதி ஆதாயத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.
மகர ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர மாற்றம் சிறப்பான நன்மைகளைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் புதிய சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் புதிய யோசனைகளை செயல்படுத்தி வெற்றியைப் பெறுவீர்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். உங்கள் புத்திசாலித்தனமும், விவேகமும் சரியான முடிவுகளை எடுக்க உதவும். வேலையில் இருப்பவர்கள் புதிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)