karthigai matha rasi palan 2025 kanni: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான மாதமாக இருக்கும். ராசிநாதன் புதனின் சஞ்சாரம் மற்றும் லாப ஸ்தானத்தில் விழும் குருவின் பார்வை காரணமாக தொட்டது துலங்கும். புதிய பாதைகள் திறக்கப்படும்.
கிரக நிலைகள்:
கன்னி ராசியின் அதிபதியான புதன் பகவான் சுக்கிரனுடன் இணைந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.
குரு பகவான் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். மாதத்தின் தொடக்கத்தில்
புத சுக்ர யோகம் உருவாவது புதிய முயற்சிகளுக்கு வெற்றியும், குடும்பத்தில் மகிழ்ச்சி ஆகியவற்றைத் தரும்.
குருவின் வக்ரம் காரணமாக தடைபட்ட காரியங்கள் கைகூடும்.
பொதுவான பலன்கள்:
கன்னி ராசிக்காரர்கள் கார்த்திகை மாதத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தொட்டது அனைத்தும் துலங்கும்.
தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் காணப்படும். குருவின் பார்வை காரணமாக எதிர்பாராத நன்மைகள், திருமண முயற்சிகள் கைகூடும்.
பணப்புழக்கம் சீராக இருக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும்.
இருப்பினும் செவ்வாயின் ஆதிக்கம் காரணமாக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற விரயங்கள் ஏற்படக்கூடும்.
நிதி நிலைமை:
பொருளாதார வளர்ச்சி இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் மட்டுமில்லாமல் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
புத சுக்ர யோகம் தன ஸ்தானத்தில் உருவாவதால் எதிர்பாராத வழிகளில் நன்மை கிடைக்கும்.
வீட்டை அழகுப்படுத்தும் ஆடம்பரப் பொருட்களுக்காக செலவு செய்வீர்கள்.
நீண்ட நாட்களாக காத்திருந்த சம்பள உயர்வு தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.
வேலை மற்றும் தொழில்:
தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருந்த தடைகள் சிக்கல்கள் அனைத்தும் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பணி புரியும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான தகவல்கள் எதிர்பார்க்கலாம். எ
திர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகள் லாபத்தை ஈட்டுவீர்கள்.
தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். ஐடி துறையில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் சகோதர ஒற்றுமை பலப்படும். சகோதரர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகள் கைகூடும்.
தாயின் ஆரோக்கியம் சீராகும்.
நிலம் மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
மாதத்தின் தொடக்கத்தில் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த நேரிடலாம்.
மன உறுதி குறைய வாய்ப்பு உண்டு. யோகா தியானம் மேற்கொள்வது மன உளைச்சலை தவிர்க்க உதவும்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.
முயற்சிக்கு ஏற்ற மதிப்பெண்களை பெறுவீர்கள். உயர்கல்வி குறித்த முயற்சிகள் வெற்றிகளைத் தரும்.
பரிகாரங்கள்:
சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேகங்களில் கலந்து கொள்வது நல்லது. அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
கால பைரவர் வழிபாடு மேற்கொள்வது வருமானத்திற்கான வழிகளை திறக்கும்.
இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)