மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி.! மார்ச் 15 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Published : Mar 09, 2026, 01:38 PM IST

Sun Transit 2026 Unlucky Zodiac Signs : மார்ச் 15, 2026 ஆம் தேதி சூரிய பகவான் கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசிக்குள் நுழைய இருக்கிறார். இது சுப நிகழ்வு என்றாலும் குருவின் நிலையைப் பொறுத்து சில ராசிகளுக்கு இது சவாலான காலகட்டமாக அமையக்கூடும்.

PREV
15
Sun Transit 2026 Unlucky Zodiac Signs

சூரிய பகவான் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். அவர் ஒவ்வொரு முறையும் ராசியை மாற்றும் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இந்த நிலையில் சூரிய பகவான் மார்ச் 15, 2026 கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிக்குள் நுழைந்திருக்கிறார். அங்கு ஏற்கனவே சில சுப கிரகங்கள் இருப்பதால் சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இருப்பினும் மார்ச் 15ஆம் தேதி தொடங்கி சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
மீனம்

மீன ராசியில் முதல் வீடான லக்ன வீட்டில் சூரிய பகவான் அமர இருக்கிறார். மேலும் செவ்வாய் போன்ற சில கிரகங்களும் இருப்பதால் அதீத சக்தி வெளிப்படும். எனவே இந்த காலகட்டத்தில் அதிகப்படியான அழுத்தங்களை சந்திக்க நேரிடலாம். தேவையற்ற கோபம் மற்றும் பிடிவாதம் காரணமாக உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல், உடல் சூடு தொடர்பான உபாதைகள் வரலாம். அரசு சார்ந்த விஷயங்களில் அல்லது சட்ட விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

35
கன்னி

சூரியன் கன்னி ராசியின் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது திருமணம் மற்றும் கூட்டுத் தொழிலை குறிக்கும் வீடாகும். இந்த காலகட்டத்தில் கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் நிதி விஷயங்களில் வெளிப்படையாக இருப்பது அவசியம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம். எனவே பேச்சில் நிதானம் தேவை.

45
சிம்மம்

சிம்ம ராசிக்கு சூரியனின் பெயர்ச்சி சாதகமான சூழலை ஏற்படுத்தவில்லை. இது ஒரு சோதனையான காலகட்டத்தை குறிக்கிறது. எடுக்கும் முயற்சிகளில் தாமதங்கள், தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படலாம். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். வாகனங்களை ஓட்டும்பொழுது அதிக கவனம் தேவை. யாரிடமும் ரகசியங்களை பகிர வேண்டாம். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் தெரிவிக்க வேண்டாம். மற்றவர்களின் விவகாரங்களை தலையிடுவதை தவிர்க்கவும்.

55
கும்பம்

கும்ப ராசியின் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சூரிய பகவான் நுழைய இருக்கிறார். இது பணப்புழக்கத்தை பாதிக்கும். எதிர்பாராத மருத்துவச் செலவுகள் அல்லது தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். உங்கள் வங்கி இருப்பு அல்லது சேமிப்பு கரையக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதங்கள் எழக்கூடும். மற்றவர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் இணக்கமாக செல்லவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories