கும்ப ராசியின் முதல் வீட்டில் சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைவதன் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு வெற்றியும், புகழும் கிடைக்கும். மகிழ்ச்சி பெருகும். துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். நீதிமன்ற வழக்கில் வெற்றி கிடைக்கும். நேர்காணலில் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதிய தொழில் தொடங்க சாதகமான காலம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். திருமண தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)