Sukra Peyarchi Palangal in Tamil: 2026 ஜனவரியில் சுக்கிர பகவான் தனது நிலையில் நான்கு முறை மாற்றங்களை செய்ய இருக்கிறார். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அன்பு, அழகு, செல்வம், ஆடம்பரம், கலைகள் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் அவர் சுகபோக வாழ்க்கையையும், புகழ் மற்றும் சிறப்பான குடும்ப உறவுகளையும் பெறுவார் என்று கூறப்படுகிறது. அவரின் நிலையில் ஏற்படும் மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுக்கிர பகவான் மூன்று முறை நட்சத்திரத்தையும், ஒருமுறை ராசியையும் மாற்ற இருக்கிறார்.
214
ஜனவரி 2026 சுக்கிர பெயர்ச்சி தேதிகள்:
ஜனவரி 10: மதியம் 12:26 மணியளவில் பூராடம் நட்சத்திரத்திலிருந்து உத்திராடம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
ஜனவரி 13: அதிகாலை 04.02 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
ஜனவரி 21: அதிகாலை 02:24 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
ஜனவரி 31: மாலை 05:41 மணிக்கு திருவோணம் நட்சத்திரத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
314
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரப் பெயர்ச்சியால் உறவுகளில் இனிமை கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். எடுக்கும் புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை வலுவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகும் மாறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் முடியும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். நீண்ட தூரப. பயணங்கள் அனுகூலமாக அமையும்.
514
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் லாபகரமானதாக மாறும்.
614
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உணர்ச்சி ரீதியாக ஏற்ற இறக்கங்கள் இருக்கும். முதலீடுகளிலும், ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனமும் அக்கறையும் தேவை.
714
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வசீகரம் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். குடும்ப உறவுகள் வலுப்படும். பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் தொழிலுக்கு உதவும்.
814
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கலாம். காதல் விஷயங்களில் ஆர்வம் கூடும். உறவுகளில் தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. வேலையில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரலாம்.
914
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆடம்பரப் பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் மராமத்து அல்லது புதிய வீடு வாங்குதல் போன்றவற்றை மேற்கொள்வீர்கள். குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள்.
1014
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக பெரும் வெற்றிகள் தேடி வரும். பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும். உறவுகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
1114
தனுசு
ஜனவரி மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிக்கு உதவும். நிதி விவகாரங்களில் நன்மைகள் ஏற்படும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் மறையும்.
1214
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரப் பெயர்ச்சி யோகத்தை வழங்கும். செல்வம், புகழ், வியாபாரம் என அனைத்திலும் வளர்ச்சி காணப்படும். பல வழிகளில் நன்மை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் பொங்கும். புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
1314
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஏற்படும். சமூகத் தொடர்புகள் விரிவடையும். நிதி நிலைமை வலுப்பெறும். தன்னம்பிக்கையுடன் புதிய பணிகளைத் தொடங்கி வெற்றிகளைப் பெறுவீர்கள்.
1414
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். ஆக்கபூர்வமான பணிகளில் ஆர்வம் கூடும். நடைமுறை ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் விழிப்புணர்வு தேவை. பணப் பரிமாற்றங்களின் போது திட்டமிடல் அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)