ஜோதிடத்தில் கேது பகவான் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். அவர் லட்சியம், விடாமுயற்சி, புதுமை, மாயை, ஆசை, ஆன்மிகம், துறவு, முக்தி, திடீர் நிகழ்வுகள் மற்றும் கர்ம பலன்களின் காரணியாக கருதப்படுகிறார். கேது பகவான் ஒருவரின் பொருள் இன்பங்களை விலக்கி, ஆன்மீகப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். அதனால்தான் ஜோதிடத்தில் கேது பெயர்ச்சியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி கேதுவின் முதல் பெயர்ச்சி ஜனவரி 25 அன்று நடைபெற உள்ளது.
ஜனவரி 25, 2026 கேது பகவான் பூர நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். பூர நட்சத்திரமானது செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரகராக விளங்கும் சுக்கிர பகவானால் ஆளப்படும் நட்சத்திரமாகும். எனவே கேதுவின் இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தை வழங்கவுள்ளது. கேதுவின் பூர நட்சத்திரப் பெயர்ச்சியால் நிதி ஆதாயத்தையும், முன்னேற்றத்தையும் அனுபவிக்க உள்ள ஐந்து ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.