Guru Peyarchi 2026: சிம்ம ராசியில் அமரும் குரு பகவான்.! 2026 முதல் இந்த ராசிகள் பணத்தையும், புகழையும் அள்ளப் போறீங்க.!

Published : Dec 18, 2025, 01:26 PM IST

Guru Peyarchi 2026 Rasi Palangal: 2026 ஆம் ஆண்டு குரு பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இது மூன்று ராசிகளுக்கு அளவில்லாத நன்மைகளை வழங்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
14
குரு பெயர்ச்சி 2026

2026 ஆம் ஆண்டில் கிரகங்கள் தங்கள் ராசிகளை தொடர்ந்து மாற்ற உள்ளன. அந்த வகையில் குரு பகவானும் தங்கள் ராசியை மாற்ற இருக்கிறார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சூரிய பகவானின் சொந்த வீடான சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாலும், மூன்று ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் அனுபவிக்க உள்ளனர். குரு பெயர்ச்சியால் பலன் பெறப்போகும் அந்த மூன்று ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
ரிஷபம்

2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். குரு உங்கள் ராசியின் நான்காவது வீடு வழியாக சஞ்சரிக்க இருக்கிறார். நான்காவது வீடு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் பொன், பொருள், வசதிகளை அடைவீர்கள்.

புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களில் இருந்து பணவரவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. குரு பகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுவதால் வேலை மற்றும் வணிகத்திலும் அபரிமிதமான முன்னேற்றம் காணப்படும்.

34
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை கொண்டு வரும். குரு பகவான் உங்கள் ராசியின் 11-வது வீடான வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தின் வழியாக பெயர்ச்சி அடைய இருக்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் உங்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். 

பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உங்கள் தலைமைத்துவ குணங்களால் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். வேலையில் ஒரு குழுவை தலைமை தாங்கி, வழிநடத்திச் செல்வீர்கள். பங்குச்சந்தை மற்றும் பிற முதலீடுகள் மூலம் பயனடைவீர்கள். குடும்பத்திற்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

44
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசியின் ஒன்பதாவது வீடான அதிர்ஷ்ட ஸ்தானத்தின் வழியாக பயணிப்பார். எனவே இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

மாணவர்கள் போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று வெற்றிகளைப் பெறுவீர்கள். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதால் வங்கி இருப்பு உயரும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories