Feb 12 Simma Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, சுத்து போடும் கிரகங்கள்.! பட்ட காலிலேயே படும்.! அடிக்கும் எச்சரிக்கை மணி.!

Published : Feb 11, 2026, 04:52 PM IST

February 12, 2026 Simma Rasi Palangal: பிப்ரவரி 12, 2026 சிம்ம ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
பொதுவான பலன்கள்:

சிம்ம ராசி நேயர்களே, ராசிநாதன் சூரியன் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு புதன் பகவானுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.

இன்றைய தினம் அலைச்சல் அதிகமாக காணப்படும். உங்கள் உழைப்புக்கான பலன்கள் தாமதமாக கிடைக்கலாம். எனவே எந்த காரியமானாலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நன்கு ஆலோசனை செய்து எடுக்கவும்.

நிதி நிலைமை:

இன்று கிரகங்களின் நிலை காரணமாக நிதி நிலைமை திருப்திகரமாக இருக்காது. அதிக செலவுகள் காணப்படும். செலவுகளை கையாளுவதை கடினமாக உணர்வீர்கள். பணப்புழக்கம் ஓரளவிற்கு திருப்திகரமாக இருக்கும். ஆனால் அதே சமயம் செலவுகளும் வரிசை கட்டி நிற்கலாம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். எனவே திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

ஆரோக்கியம்:

இன்று முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். தூக்கமின்மை காரணமாக சோர்வு, உடல் அசதி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே மிகுந்த கவனத்துடன் இருக்கவும்.

பரிகாரம்:

இந்து லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது. சூரிய பகவானுக்கு சூரிய நமஸ்காரம் செய்வது நன்மைகளைத் தரும். பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த அரிசியை உணவாக வழங்கலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories