Feb 12 Mithuna Rasi Palan: மிதுன ராசி நேயர்களே, இன்று சிக்கல்கள் அனைத்தும் தீரும் நல்ல நாளாக அமையும்.!

Published : Feb 11, 2026, 04:45 PM IST

February 12, 2026 Mithuna Rasi Palangal: பிப்ரவரி 12, 2026 மிதுன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
பொதுவான பலன்கள்:

மிதுன ராசி நேயர்களே இன்றைய தினம் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்திலும், குரு ஜென்ம ராசியிலும், சனி பத்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர்.

கிரகங்களின் சாதகமான நிலை காரணமாக உங்கள் கடின முயற்சிகளில் வெற்றிகளை காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும்.

நிதி நிலைமை:

இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். நிதி விஷயங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணவரவு காரணமாக உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கடன்களை அடைத்து மன நிம்மதி பெறுவீர்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் நிலவும். இருவரும் கலந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சிறு கருத்து வேறுபாடுகளையும் பேசி சரி செய்வீகள். காதலில் இருப்பவர்களுக்கு சவாலான நாளாக இருக்கலாம். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

ஆரோக்கியம்:

இன்றைய தினம் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலைடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கி மனம் நிம்மதி பெறும். சிறு சோர்வுகள் வந்து நீங்கும். போதிய ஓய்வு அவசியம்.

பரிகாரம்:

இன்றைய தினம் விஷ்ணு பகவானை வழிபடுவது நல்லது. விஷ்ணுவுக்கு துளசிமாலை சாற்றி வழிபடவும். ஏழை மாணவர்களுக்கு பேனா நோட்டு புத்தகங்கள் தானமாக வழங்குவது நற்பலன்களை தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories