ரிஷப ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நிலையில் இருக்கிறார். இன்றைய தினம் சந்திர பகவானின் நிலை உங்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகத்தை தருகிறது. குருவின் பார்வை இருப்பதால் தெளிவு உண்டாகும்.
இன்றைய நாள் சீராக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவு புத்துணர்ச்சி தரும். மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
நிதி நிலைமை:
நிதி நிலைமை இன்றைய நாள் சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதை நல்ல முறையில் பயன்படுத்துவீறீர்கள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்வதற்கு சாதகமான நாளாகும். தொழிலில் நிதானமான லாபத்தை காண்பீர்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று வாழ்க்கை துணையுடனான உறவு மேம்படும். பிரச்சனைகளை எளிதாக தீர்ப்பீர்கள். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். புரிதல் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
ஆரோக்கியம்
இன்று உங்கள் மனநிலை மகிழ்ச்சிகரமாக காணப்படும். ஆரோக்கியம் மேம்படும். கண் எரிச்சல் அல்லது கால் வலி போன்ற சிறிய உபாதைகள் வந்து நீங்கலாம். எனவே போதுமான ஓய்வு அவசியம்.
பரிகாரம்:
இன்று வியாழக்கிழமை என்பதால் தட்சிணாமூர்த்தி அல்லது சாய்பாபாவை வழிபடலாம். பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வழங்குவது தடைகளை நீக்கி வெற்றியைத் தரும். மஞ்சள் நிற மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்யலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)