Feb 12 Kadaga Rasi Palan: கடக ராசி நேயர்களே, இன்று கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி தான்.! எச்சரிக்கை.!

Published : Feb 11, 2026, 04:48 PM IST

February 12, 2026 Kadaga Rasi Palangal: பிப்ரவரி 12, 2026 கடக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
பொதுவான பலன்கள்:

உங்கள் ராசிநாதன் சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், குரு பகவான் லாப ஸ்தானத்திலும், சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் இருக்கின்றனர். இது கலவையான பலன்களைத் தரும் நாளாக இருக்கும்.

கடக ராசி நேயர்களே இன்றைய தினம் சுமாரான பலன்களே கிடைக்கும் நாளாக இருக்கும். எடுத்த காரியங்களில் சிறு தடைகள் அல்லது சவால்களை சந்திக்க நேரிடலாம். இன்று உடல் நலத்திலும் சிறு அசௌகரியங்கள் ஏற்படும்.

நிதி நிலைமை:

கிரகங்களின் நிலை காரணமாக இன்று பணவரவு திருப்திகரமாக இருக்காது. குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம். நிதியில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க வேண்டும் என்றால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் தலையீடு அதிகரிக்கக்கூடும். இது கணவன் மனைவிக்கு இடையே விரிசிலை ஏற்படுத்தலாம். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்பு உள்ளது. எனவே பிறரை நம்பி பணிகளை ஒப்படைக்க வேண்டாம்.

ஆரோக்கியம்:

உங்கள் தாயாரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். தாயாருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் உஷ்ணத்தை தவிர்ப்பதற்கு அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். போதுமான ஓய்வு தேவை.

பரிகாரம்:

கிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் வழங்கலாம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு. மகாலட்சுமி தாயாரை வழிபடுவது பொருளாதார மேன்மையைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories