கும்ப ராசியில் நடக்கும் மகா சேர்க்கை.! 5 ராசிகளின் வாழ்வில் இருள் நீங்கும்.! அதிர்ஷ்டம் கொட்டும்.!

Published : Feb 11, 2026, 10:47 AM IST

Shukraditya rajyog 2026: பிப்ரவரி 2026-ல் சூரியன் மற்றும் சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கை நிகழ உள்ளது. இந்த சேர்க்கை 5 ராசிகளுக்கு மிகவும் சுப பலன்களைத் தரவுள்ளது. அந்த 5 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
சுக்ராதித்ய யோகம் 2026

ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நகர்ந்து பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப சேர்க்கைகளை உருவாக்குகின்றன. பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி, சுக்கிரனுடன் இணைந்து சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறார். இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
மேஷம்

சூரியன்-சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் சுக்ராதித்ய யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். பண ஆதாயம், பங்குச்சந்தை மற்றும் சொத்துக்களால் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த உடல்நலப் பிரச்சனைகள் தீரும்.

36
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய யோகம் நல்ல காலத்தை வழங்கும். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். காதல் உறவுகளில் வெற்றி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

46
சிம்மம்

சுக்ராதித்ய யோகம் காரணமாக சிம்ம ராசிக்காரர்களின் மன அழுத்தம் நீங்கும். உடல்நலப் பிரச்சனைகள் தீரும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தம்பதியர் மகிழ்ச்சியான பயணம் மேற்கொள்வார்கள். சமூகத்தில் அந்தஸ்து மற்றும் செல்வாக்கு உயரும்.

56
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வமும், செழிப்பும் பெருகும். சூரியன்-சுக்கிரன் சேர்க்கை சுப பலன்களைத் தரும். புதிய தொழில் தொடங்கலாம். காதல் உறவுகளில் வெற்றி உண்டாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

66
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். திட்டமிட்ட காரியங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories