கும்ப ராசியில் சந்திர கிரகணம்: குபேர யோகம் பெறப்போகும் அந்த 3 ராசிகள் யார்? உங்கள் ராசி இருக்கா?

Published : Feb 10, 2026, 11:18 PM IST

Lunar Eclipse in Aquarius 2026 Kubera Yoga : கும்ப ராசியில் முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில் சில ராசிகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

PREV
14
Lunar Eclipse

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகணங்கள் மனித வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த காலம். அந்த வகையில், 2026-ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் மிக விசேஷமான ஒரு நாளில் நிகழ உள்ளது. ஆம், வரும் மார்ச் 3ஆம் தேதி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் முழு சந்திர கிரகணமும் நிகழ்கிறது. அதுவும், கும்ப ராசியில் முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில் சில ராசிகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

24
தனுசு ராசி: சந்திர கிரகணம் தரும் பொற்காலம்! சொத்து சேர்க்கை முதல் பணமழை வரை

கும்ப ராசியில் நிகழும் இந்த முழு சந்திர கிரகணம், தனுசு ராசிக்கு வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கியமான காலகட்டமான அமைய போகிறது. நீண்ட கால கனவு நிறைவேறும், அதாவது, சொந்தமாக வீடு இல்லையே, ஒருவண்டி கூட இல்லையே என்று கவலைப்பட்ட உங்களுக்கு இந்த காலகட்டம் ஒரு அற்புதமான மாற்றமாக அமைய உள்ளது. பொருளாதார வளர்ச்சி உண்டாகும். காசு, பணம் தேடி வரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

34
மகர ராசி: சந்திர கிரகணத்தால் தலைகீழாக மாறப்போகும் தலையெழுத்து! தேடி வரும் வெளிநாட்டு யோகம்!

தனுசு ராசியைப் போன்று மகரம் ராசியினருக்கும் இந்த சந்திர கிரகணம் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி தரப்போகிறது. அதிர்ஷ்ட தேவதை வீட்டுக் கதவை தட்டும் அற்புதமான காலகட்டம். சமூகத்தில் உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் புதிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். மேலும், ஒரு சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டம்.

44
சிம்ம ராசி: சந்திர கிரகணம் தரும் ராஜயோகம்! மாணவர்களுக்கு வெற்றி.. வியாபாரத்தில் கல்லா கட்டப்போகும் நேரம்!

தனுசு மற்றும் மகரம் ராசியினரைப் போன்று சிம்ம ராசியினருக்கும் இந்த சந்திர கிரகணம் அற்புதமான வாய்ப்புகளை வழங்க போகிறது. பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொடும் காலகட்டம். தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மேலும், தொழில், வியாபாரமும் அடுத்த கட்டத்திற்கு விரிவடையும். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய முதலீடுகள் மூலமாக லாபம் கிடைக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories