Mars Rahu conjunction forms Angarak Yoga 2026 : பிப்ரவரி மாதமான இந்த மாதத்தின் கடைசியில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கையால் உருவாகும் அங்காரக யோகத்தால் இந்த ராசியினருக்கு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகம். ராகுவின் பெயர்ச்சியானது 12 ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி இந்த ராகு பகவான் கும்ப ராசியின் இருக்கும் நிலையில் வரும் 23ஆம் தேதி செவ்வாய் பகவானும் கும்ப ராசிக்கு பயணமாகிறார். இதன் காரணமாக ராகு மற்றும் செவ்வாய் இணைந்து அங்காரக யோகத்தை உருவாக்குகிறது. இந்த அங்காரக யோகத்தால் 2 ராசிகளுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வரப்போகிறது. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்...
23
மேஷ ராசிக்கான அங்காரக யோக பலன்:
இந்த அங்காரக யோகம் மேஷம் ராசியினருக்கு சாதகமற்ற பலனை தரப் போகிறது. அதாவது, கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையாக செயல்பட வேண்டும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களது குணாதிசயம் முற்றிலும் மாறுபடும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆக்ரோஷமாக செயல்படுவீர்கள்.
33
விருச்சிக ராசிக்கான அங்காரக யோக பலன்:
அங்காரக யோக பலனை பார்க்கையில் விருச்சிக ராசிக்கு சாதகமற்றதாக உள்ளது. கணவன் மனைவிக்கிடையில் வீண் வாக்குவாதம் ஏற்படக் கூடும். குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படலாம். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். கடன் வாங்கும் சூழல் உருவாகும்.