குருவின் அருளால் குவியும் செல்வம்! பங்குச்சந்தை முதல் வெளிநாட்டுப் பயணம் வரை: ரிஷப ராசிக்கான மார்ச் மாத பலன்!

Published : Feb 10, 2026, 08:52 PM IST

Rishaba Rasi March Month 2026 Rasi Palan in Tamil : ரிஷப ராசியைப் பொறுத்த வரையில் மார்ச் மாதத்திற்கான ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
மார்ச் மாத ராசிபலன் 2026 ரிஷபம் ராசி

ரிஷப ராசியைப் பொறுத்த வரையில் மார்ச் மாத ராசி பலன்களை பார்க்கையில் அதிர்ஷ்டமும், முன்னேற்றமும் தரக்கூடிய ஒரு மாதமாக இருக்கும். கிரக நிலைகளை பார்க்கையில் குரு பகவான் வக்ர நிலையில் இருந்தாலும் வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் நேர்கதியில் செல்வது பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

மேலும், ராகு பகவான் 10ஆவது இடத்திலும், கேது பகவான் 4ஆவது இடத்திலும், சனி பகவான் 11ஆவது இடத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர். அதோடு, செவ்வாய், புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் ரிஷப ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட் பற்றி பார்க்கலாம்.

25
வேலை, தொழில் மற்றும் வியாபாரம்

அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக இருந்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். எனினும் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழிலதிபர்களுக்கு தொழிலை விரிவுபடுத்த ஏற்ற மாதம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து லாபம் கூடும்.

35
பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை

மார்ச் மாதத்தைப் பொறுத்த வரையில் நிதி ரீதியாக பலம் வாய்ந்த ஒரு மாதமாக இருக்கும். கேட்ட இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் உங்களுக்கு இந்த மாதம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கண்ணை மூடிக்கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்ய லாபம் கிடைக்கும். இதுவே மாதத்தின் பின் பாதியில் சுக்கிரன் 12ஆவது இடத்திற்கு பெயர்ச்சியாவதால், உங்களுக்கு திடீரென்று ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும்.

45
காதல், திருமண வாழ்க்கை:

காதல் ஜோடிகளுக்கு சிறப்பான மாதமாக இந்த மாதம் இருக்கும். ஜோடிகளுக்கு முன்பை விட இந்த மாதம் உறவு பலப்படும் வகையில் இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். இருவரும் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

55
கல்வி மற்றும் வெளிநாட்டு வாய்ப்பு:

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்தி படிக்க நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு முயற்சிகள் கை கொடுக்கும்.

உடல் ஆரோக்கியம்: அலட்சியம் கூடாது:

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு கண் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரக் கூடும். உடலில் ஏதேனும் காய்ச்சல் தொற்று உள்பட காயம் ஏதேனும் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நன்மை தரும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories