astrology : சீக்கிரம் கோபப்படும் ராசிக்காரர்கள்...இவங்க கிட்ட மட்டும் கவனமாக இருக்கணும்

Published : Aug 11, 2026, 05:30 PM IST

சில ராசிக்காரர்களுக்குக் கிரகங்களின் தாக்கத்தால் சட்டெனக் கோபம் வரும். யோசிக்காமல் கோபப்பட்டுவிட்டுப் பிறகு வருந்துவது இவர்களின் இயல்பு. எந்தெந்த ராசியினருக்கு இந்த அதிவேகக் கோபக் குணம் இருக்கும் என்பதைப் பற்றி விரிவாக அறிய இதைப் படியுங்கள்!

PREV
16
சீக்கிரம் கோபப்படும் ராசிக்காரர்கள் :

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் மிகவும் இயல்பான ஒன்று. இருப்பினும், ஜோதிட ரீதியாக சில ராசிக்காரர்களுக்குக் கோபம் என்பது இமைக்கும் நேரத்தில், மிக வேகமாகக் கிளம்பிவிடும். கிரகங்களின் ஆதிக்கமும், பஞ்சபூதத் தத்துவங்களின் தாக்கமுமே இதற்குக் காரணமாக அமைகின்றன. கோபத்தாலேயே பல சிக்கல்களை சந்தித்து, உறவுகளை சீக்கிரமே இழந்து விடும் நபர்களும் இவர்களாக தான் இருப்பார்கள். எந்தெந்த ராசியினருக்குக் கோபம் சட்டென்று வருகிறது, அதன் பின்னணியில் உள்ள ஜோதிடக் காரணங்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

26
மேஷம் (நெருப்பின் வேகம்):

காரணம்: செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற முதல் ராசியான மேஷம், நெருப்புத் தத்துவத்தைக் கொண்டது.

கோபத்தின் தன்மை: காரியங்களில் தாமதம் ஏற்படுவதையோ அல்லது தங்கள் எண்ணத்திற்குத் தடை வருவதையோ இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இவர்களின் கோபம் எரிமலை போலத் திடீரென வெடிக்கும்; ஆனால், சில நிமிடங்களிலேயே அடங்கி, இயல்புநிலைக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் கோபப்பட்டு பேசிய வார்த்தைகளால் பலரின் பகையை சீக்கிரம் சம்பாதித்து கொள்வதுடன், மற்றவர்களால் தவறாகவும் புரிந்து கொள்ளப்படக் கூடியவர்கள்.

36
சிம்மம் (அதிகாரத்தின் கம்பீரம்):

காரணம்: சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியினருக்குத் தங்களின் சுயமரியாதையும் கம்பீரமும் மிக முக்கியம்.

கோபத்தின் தன்மை: தன்மானத்திற்குச் சிறு பங்கம் வந்தாலும் அல்லது தங்களை அலட்சியப்படுத்தினால் இவர்களுக்குக் கோபம் எல்லை கடந்துவிடும். இவர்களின் சீற்றம் ஆதிக்கம் செலுத்தும் தன்மையைக் கொண்டிருக்கும். தங்கள் பேச்சிற்கு எப்போதும் மதிப்பு இருக்க வேண்டும் என நினைப்பதால் யாராவது எதிர்த்து பேசுவதை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

46
விருச்சிகம் (ஆழமான உணர்ச்சிப் பெருக்கு):

காரணம்: நீர் தத்துவ ராசியாக இருந்தாலும், செவ்வாயின் மறைமுக ஆதிக்கம் கொண்டதால் உணர்ச்சிகள் மிகவும் தீவிரமானவை.

கோபத்தின் தன்மை: மேஷத்தைப் போல உடனடியாக வெளிப்படாமல், மனதிற்குள் கோபத்தைக் கனலாக வளர்ப்பார்கள். துரோகத்தையோ அல்லது பொய் பேசுவதையோ கண்டால் இவர்களின் கோபம் பெரும் சீற்றமாக மாறும். ஒருவர் செய்த தவறை மனதிற்குள்ளாக வைத்துக் கொண்டு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை சொல்லிக் காட்டி, தனது கோபத்தை வெளிக்காட்டும் தன்மை கொண்டவர்கள்.

56
தனுசு (நியாயத்திற்கான போர்க்கொடி):

காரணம்: நெருப்புத் தத்துவத்தையும் குருவின் வழிகாட்டுதலையும் கொண்ட ராசி.

கோபத்தின் தன்மை: அநீதியையோ அல்லது தவறான கருத்துக்களையோ காணும் போது இவர்களுக்குக் கோபம் சட்டென்று தொற்றிக் கொள்ளும். கோபத்தில் இவர்களது பேச்சு மிகவும் காரசாரமாகவும், நேர்மையாகவும் இருக்கும். எதிரில் இருப்பவர்களின் மனநிலையை பற்றி கவலைப்படாமல் மனதில் பட்டதையும், நியாயத்தையும் முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விடுவார்கள்.

66
கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எளிய ஜோதிட டிப்ஸ்:

குளிர்ந்த நீர் அருந்துதல்: கோபம் வரும் தருணங்களில் வெள்ளி டம்ளரில் நீர் அருந்துவது சந்திரனின் சுப ஆற்றலை அதிகரித்து மனதை அமைதிப்படுத்தும்.

சுவாசப் பயிற்சி: காரசாரமான உணவுகளைக் குறைத்து, பிராணாயாமம் அல்லது தியானம் செய்வதன் மூலம் செவ்வாய் மற்றும் சூரியனின் தீவிர ஆதிக்கத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories