Shiv Yog 2026: ஜூன் மாத இறுதியில் 'சிவ யோகம்'.! 3 ராசிகள் மீது பொழியப்போகும் சிவபெருமான் அருள்.! அடிக்கும் பம்பர் லாட்டரி.!

Published : Jun 17, 2026, 11:41 AM IST

Shiv Yog 2026: ஜூன் 24-ஆம் தேதி காலை 10:23 மணிக்கு சிவ யோகம் தொடங்குகிறது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இங்கே பார்க்கலாம். 

PREV
16
Shiv Yog 2026

இந்த வருடம், சிவ யோகம் ஜூன் 24, 2026 அன்று காலை 10:23 மணிக்கு தொடங்குகிறது. இந்த யோகம் ஜூன் 25, 2026 அன்று காலை 10:54 மணி வரை நீடிக்கும். ஜோதிடத்தில் சில சுப யோகங்கள் ஒன்றாக வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் சுப நிலைகளாலும், சுப கிரகங்களின் ஆதிக்கத்தாலும் உருவாகும் இந்த சிவ யோகம், சிவபெருமானின் முழுமையான அருளையும் நேர்மறை ஆற்றலையும் அள்ளித்தரக்கூடியது.

இதையும் படியுங்கள்:  Numerology: முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

26
சிவ யோகத்தின் பலன்கள்

சிவ யோகம் ஒருவருக்கு அதிர்ஷ்டம், மன அமைதி, வெற்றி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தைத் தரும். இந்த யோகத்தின் போது, ஒருவரின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இந்த யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது என்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:  Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!

36
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சிவ யோகம் ஒரு திருப்புமுனையாக அமையப் போகிறது. அலுவலகத்தில் உங்களின் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு தேடி வரலாம். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் மற்றும் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் மிக எளிதாக முடிவடையும். உங்களின் சுய நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் அல்லது சுப நபர்களின் உதவியால் புதிய லாபகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:  Name Numerology: உங்க பெயர் 'M'ல தொடங்குதா? எப்போ சொந்த வீடு வாங்குவீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.!

46
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த யோகம் பெரும் பொருளாதார முன்னேற்றத்தையும், பண வரவையும் தரப்போகிறது. திடீர் பண லாபம் உண்டாகும். வருமானத்திற்குப் புதிய வழிகள் பிறக்கும். இந்த காலகட்டத்தில் செய்யும் முதலீடுகள் மற்றும் வியாபார விரிவாக்கங்கள் எதிர்காலத்தில் பெரும் லாபத்தைத் தரும். குடும்பத்தின் தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகம் கூடி வரும்.

இதையும் படியுங்கள்:  Aani Month 2026: ஆனி மாத ராசிபலன் 2026 - 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

56
தனுசு

தனுசு ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவும் வெற்றியும் உண்டாகும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களின் திறமைக்குத் தகுந்த பாராட்டும், மேலதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் மனம் ஆன்மீகப் பாதையில் ஈர்க்கப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் நல்ல கவனம் செலுத்தும் சூழல் உருவாகும், உயர்கல்விக்கான முயற்சிகள் வெற்றியடையும்.

இதையும் படியுங்கள்:  Vyatipat Yog 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் ஆபத்து.! உருவாகும் விபரீத யோகம்.! 5 ராசிகளுக்கு எச்சரிக்கை மணி.!

66
வழிபாட்டு முறை

இந்த சிவ யோக காலத்தில் (ஜூன் 24 மற்றும் 25) சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதும், 'ஓம் நமசிவாய' மந்திரத்தை உச்சரிப்பதும் அனைத்து ராசியினருக்கும் மன அமைதியையும், தடைகளற்ற வெற்றியையும் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories