30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சிறப்பு சேர்க்கை.! இந்த 3 ராசிகளுக்கு ‘கோல்டன் டைம்’ ஆரம்பம்.!

Published : Feb 27, 2026, 12:54 PM IST

Shani Shukra Yuti : சனி-சுக்கிரன் சேர்க்கை 2026: 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சனி-சுக்கிரன் சேர்க்கை நிகழ உள்ளது. இந்த சக்திவாய்ந்த யோகம் 3 ராசிகளுக்கு பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாக நல்ல பலன்களைத் தரும். 

PREV
14
சனி சுக்கிரன் சேர்க்கை 2026

மார்ச் 2ல் சுக்கிரன் மீனத்தில் நுழைகிறார். ஏற்கனவே அங்குள்ள சனியுடன் சேர்வதால் சில ராசிகளுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும். சனி கடின உழைப்பையும், சுக்கிரன் செல்வத்தையும் குறிப்பதால், இதன் சேர்க்கை நல்ல பலனைத் தரும். சனி சுக்கிரன் சேர்க்கையால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.

24
ரிஷபம்

ரிஷப ராசிக்கு சுக்கிரன் அதிபதியாவார். இந்த சேர்க்கையின் போது லாப வீட்டில் சுக்கிரன் இருப்பதால், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் முடிக்க முடியாமல் இருந்த பணிகள் மீண்டும் தொடங்கும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமான ஆதாரங்கள் விரிவடையும்.

34
துலாம்

துலாம் ராசியின் அதிபதியாகவும் சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். ஆறாம் வீட்டில் சனி-சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இதன் காரணமாக நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.

44
கும்பம்

கும்ப ராசியை சனி பகவான் ஆள்கிறார். 12 ஆம் வீட்டில் இந்த சேர்க்கை நடக்க இருப்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும். எதிரிகளை வெல்வீர்கள். கடின உழைப்புக்கு இப்போது பலன் கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். வெற்றி நிச்சயம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories