தனகாரகனாகிய குரு பகவான் அஸ்தமனம் அடைவதால், தனுசு ராசியினருக்குப் பண வரவிலும், முக்கிய முயற்சிகளிலும் சில தடங்கல்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தாமதம் ஆகலாம். தொழிலில் மந்த நிலை காணப்படுவதால், புதிய உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடனும், வெளிவட்டாரத்திலும் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். எந்தவொரு சிறிய காரியத்தையும் சவால்களைச் சந்தித்தே முடிக்க வேண்டியிருக்கும். நீண்ட தூரப் பயணங்களின் போது உங்களது உடைமைகளிலும், வாகன ஓட்டத்திலும் கூடுதல் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் அந்தணர்களுக்கோ அல்லது வயதானவர்களுக்கோ மஞ்சள் நிற ஆடைகள், கொண்டைக்கடலை அல்லது வாழைப்பழங்களைத் தானமாக வழங்கலாம்.