Shadashtak Yog 2025: டிசம்பர் மாத இறுதியில் குரு மற்றும் புதன் பகவான் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றனர். இது பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் இந்த மாத இறுதியில் சில சுபயோகங்கள் உருவாக்குகின்றன. அதன்படி டிசம்பர் இறுதியில் புதன் மற்றும் குரு இருவரும் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றனர். ஜோதிடத்தின்படி ஒரு ராசியிலிருந்து ஆறாவது (ஷடம்) எட்டாவது (அஷ்டமம்) ராசிகளில் 2 கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது உருவாகும் நிலைத்து ஷடாஷ்டக யோகம் என்று பெயர்.
ஷடாஷ்டக யோகம் எப்போது உருவாகிறது?
டிசம்பர் 27, 2025 அன்று புதன் மற்றும் குரு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 150 டிகிரி (ஷடாஷ்டக நிலை) கோணத்தில் அமைகின்றன. புதன் பகவான் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், வணிகம் ஆகியவற்றின் காரகராகவும், குரு பகவான் சுப நிகழ்வுகள், செல்வம், ஞானம், மரியாதை ஆகியவற்றின் காரகராகவும் விளங்குகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் இணைவு காரணமாக பலன்பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
26
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் நல்ல நாட்களை வழங்க உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். புதிய அனுபவங்களின் மூலம் வெற்றிக்கான பாதைகள் திறக்கும். பழைய கடன் பிரச்சனைகளை முடித்து மன நிம்மதி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த தகராறுகளை தீர்ப்பீர்கள். உள்நாடு அல்லது வெளிநாட்டிற்குள் பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். எதிர்பாராத வகையில் பணம் வரும். சொத்து பிரச்சனைகள் தீரும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
36
கடகம்
குரு மற்றும் புதனின் இணைவால் உருவாகும் ஷடாஷ்டக யோகம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பங்குச்சந்தைகள் மற்றும் பிற முதலீடுகள் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலில் முதலீடு செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த பலன்களை காணலாம். வேலையில் இருப்பவர்கள் அதிகபட்ச பயன்களைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் அதிகரிக்கும். புதிய அதிகாரங்கள் கைக்கு கிடைக்கலாம். வாழ்க்கையில் இனிமையான தருணங்களை அனுபவிப்பீர்கள்.
ஷடாஷ்டக யோகம் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளைப் பெற இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்த படிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகி லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறவுகள் இனிமையானதாக மாறும். நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி நிலவும். உடல் நலம் மேம்படும்.
56
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் மகத்தான நன்மைகளைத் தரும். எதிர்பாராத பண வரவுகள் அல்லது நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக காத்திருந்த வங்கிக் கடன் அல்லது உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகம் அல்லது தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபம் தரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, அதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
66
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி நிலைமை உயரும். பொருளாதார நிலைமை வலுப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் நிதி ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். இதுவரை வாழ்க்கையில் அனுபவத்து வந்த கஷ்டங்கள் விலகும். குழந்தைகளின் விஷயங்களில் இருந்த மன அழுத்தம் குறையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இதன் காரணமாக சேமிப்பு அதிகரிக்கும். வீடு நிலம் கார் வாங்க விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)