நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், ஆற்றல் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். பிப்ரவரி 23, 2026 காலை 11:57 மணிக்கு கும்ப ராசியில் நுழையும் செவ்வாய் பகவான், ஏப்ரல் 2, 2026 வரை அந்த ராசியிலேயே பயணிப்பார்.
ஏற்கனவே கும்ப ராசியில் பாவ கிரகமான ராகு பகவான் வசிக்கிறார். செவ்வாய்-ராகு இணைவால் விஷபோதக யோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டத்தை அளிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.