Gajakesari Rajayoga 2026: குரு சந்திரன் தரும் மகாயோகம்.! குபேர யோகம் பெறப்போகும் ராசிகள்.! ஜனவரி முதல் வாரமே ஜாக்பாட்.!

Published : Jan 02, 2026, 01:59 PM IST

Gajakesari Rajyoga 2026 lucky zodiac signs: 12 ஆண்டுகளுக்குப் பின்னர் குரு மற்றும் சந்திர பகவான் மிதுன ராசியில் இணைந்து சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
Gajakesari Rajyoga 2026

வேத ஜோதிடத்தில் குரு பகவான் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வம், உயர்கல்வி ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். அவர் ஒரு ராசியில் தோராயமாக ஒரு வருடம் வரை தங்குகிறார். அவர் ஒரு ராசியின் சுழற்சியை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். ஜோதிட கணக்கீடுகளின்படி 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடக்கத்தில் குரு மிதுன ராசியில் இருப்பார். அப்போது அவர் பிற கிரகங்களுடன் இணைந்து சுபயோகங்களை உருவாக்குகிறார்.

ஜனவரி 2, 2026 அன்று காலை 9:25 மணிக்கு சந்திர பகவான் ரிஷப ராசியில் இருந்து வெளியேறி ஜனவரி 4, 2026 காலை 9:42 வரை மிதுன ராசியில் இருப்பார். அப்போது அவர் ஏற்கனவே அங்கு இருக்கும் குருவுடன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகமானது சில ராசிக்காரர்களுக்கு வசதிகள், ஆடம்பரங்கள் நிறைந்த அரச வாழ்க்கையை வழங்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

24
மிதுனம்

மிதுன ராசியின் லக்ன ஸ்தானத்தில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக உருவாகும் ‘கஜகேசரி ராஜயோகம்’ மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை வழங்க இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு மிதுன ராசியினருக்கு சாதகமான மாற்றங்களுடன் தொடங்க இருக்கிறது. தொழில் மற்றும் வேலையில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். 

நீண்ட கால பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு தீர்வு கிடைக்கும். சமூகத்தில் நற்பெயர் உயரும் வாய்ப்புகள் உண்டு. இழுபறியில் இருந்த பணிகள் முடிவடையும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: மிதுன ராசிக்காரர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, விஷ்ணு பகவானுக்கு துளசி மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுவது, ‘ஓம் நமோ நாராயணாய’ மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது பலன்களை அதிகரிக்கும்.

34
துலாம்

துலாம் ராசியின் ஒன்பதாவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாக இருக்கிறது. ஒன்பதாவது வீடு பாக்கிய ஸ்தானம் என்பதால் இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் செல்வாக்கு காரணமாக துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தில் திளைக்க இருக்கின்றனர். உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்களை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்ல இருக்கின்றது. 

புதிய வேலை மற்றும் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைகளும் வெற்றியைப் பெறும். குருவின் ஐந்தாவது பார்வை உங்கள் லக்ன ஸ்தானத்தில் விழுவதால் தன்னம்பிக்கை உயரும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் வரக்கூடும். மாணவர்கள் கல்வியில் பெரும் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: துலாம் ராசிக்காரர்கள் மகாலட்சுமி தேவிக்கு இனிப்புகளை நைவேத்தியம் செய்து வெள்ளை நிற மலர்கள் அல்லது தாமரை மலர்களால் அர்ச்சரித்து வழிபட பலன்கள் அதிகரிக்கும்.

44
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் மிகுந்த நன்மைகளைத் தர இருக்கிறது. இந்த ராஜயோகம் கும்ப ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிகழ இருக்கிறது. இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலைமை விரைவாக மேம்படும். சில காலமாக சந்தித்து வந்த பொருளாதார பிரச்சனைகள் தீரும். 

வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். வணிகம் மூலம் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கும் சிறந்த காலகட்டம் அமையும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகள் வழியாக நல்ல செய்திகளை கேட்பீர்கள்.

பரிகாரம்: குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, எலுமிச்சை சாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது பலன்களை அதிகரிக்கும். சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு ஆகியவையும் பலன்களை கூட்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories