Astrology: குரு வீட்டில் அமர்ந்த செவ்வாய்.! 3 ராசிகளுக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி தான்.!

Published : Dec 05, 2025, 01:01 PM IST

Sevvai Peyarchi Rasi Palangal: செவ்வாய் பகவான் விரைவில் குரு பகவான் ஆளும் தனுசு ராசிக்கு செல்ல இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களை அனுபவிக்க உள்ளனர்ழ அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
செவ்வாய் பெயர்ச்சி 2025

ஜோதிடத்தின்படி செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். இவர் ஆற்றல், வீரம், தைரியம், கோபம், துணிச்சல் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவரின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. செவ்வாய் பகவான் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். டிசம்பர் 7ஆம் தேதி மாலை 07:30 மணிக்கு அவர் குரு பகவானுக்கு சொந்த ராசியான தனுசு ராசிக்குள் நுழைய இருக்கிறார்.

செவ்வாய் பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பது என்பது மிகவும் சவாலான காலத்தை தரும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். டிசம்பர் 7 துவங்கிய ஜனவரி 16ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் சுமார் 40 நாட்கள் தனுசு ராசியில் பயணிக்கிறார். செவ்வாயின் சஞ்சாரம் காரணமாக சில ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட கூடும் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டில் பெயர்ச்சியாகிறார். எட்டாம் வீடு திருமணம், உறவுகள் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். எனவே இந்த காலக்கட்டத்தில் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். வேலையில் மூத்த அதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். தொழில் கூட்டாளிகளுடன் பதற்றம் காரணமாக இழப்புகளை சந்திக்க நேரலாம். வருமானத்திலும் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். நிதி நிலைமை மோசம் அடைய வாய்ப்பு உள்ளது. 40 நாட்களும் பணத்தை சேமிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம்.

34
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நான்காவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. நான்காவது வீடு என்பது சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இல்லை. இந்த காலத்தில் ஆரோக்கியத்தில் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். வேலை மற்றும் குடும்பத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது அதிக வாக்குவாதங்கள் ஏற்படலாம். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். சிறிய விஷயங்களுக்கு கூட மன அழுத்தத்தை அனுபவிக்க நேரிடலாம். எந்த வேலையை செய்தாலும் முழுமையடையாமல் பாதியிலேயே தடைபட்டு போகலாம்.

44
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் 12வது வீட்டின் வழியாக பெயர்ச்சியாகிறார். 12வது வீடு விரய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடும். வேலையில் இடமாற்றம், துணையுடன் கருத்து வேறுபாடுகள், திட்டமிட்ட வேலைகளை முடிக்க முடியாதது போவது போன்ற சவால்களை சந்திக்கலாம். தொழிலில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரலாம். திடீர் எதிரிகள் காரணமாக உங்கள் வருமானம் குறையும். உடல் ரீதியாகவும் பலவீனமாக உணர்வீர்கள். வேலைகளை திட்டமிட்டு அதற்கு ஏற்ப செய்ய வேண்டியது அவசியமாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories