Astrology: கைகோர்த்த நண்பர்கள்.! சமசப்தக ராஜயோகத்தால் பம்பர் பரிசு கிடைக்கப்போகும் 5 ராசிகள்.!

Published : Dec 05, 2025, 12:02 PM IST

Samasaptaka Rajyog 2025: டிசம்பர் 5ஆம் தேதி சக்தி வாய்ந்த சமசப்தக ராஜயோகம் உருவாக இருக்கிறது. இது ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
சமசப்தக ராஜயோகம் 2025

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தோ அல்லது பிற கிரகங்களை குறிப்பிட்ட தொலைவில் பார்வையிட்டோ சுபயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் டிசம்பர் 5ஆம் தேதி செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒன்றையொன்று ஏழாம் பார்வையாக பார்ப்பதால் சமசப்தக ராஜயோகம் உருவாகிறது.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் தனது ராசியில் இருந்து ஏழாவது ராசியில் இருக்கும் மற்றொரு கிரகத்தை பார்ப்பதே சமசப்தக ராஜயோகமாகும். இந்த யோகமானது பூர்வீக சொத்துக்கள், தைரியம், தலைமைப் பண்பு, உறவுகள் மற்றும் நிதி ஆதாயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. சந்திரனின் இயல்பான கருணை மற்றும் செவ்வாயின் ஆக்ரோஷமான ஆற்றல் ஆகியவை இந்த யோகத்தின் மூலம் சமநிலையைப் பெறுகிறது.

26
மிதுனம்

சமசப்தக ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். வேலையில் சாதகமான சூழலைக் காண்பீர்கள். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் கடினமான பணிகளை கூட எளிதாக முடிப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு லாபகரமான வாய்ப்புகளைத் தரும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் அன்பும், நல்லிணக்கமும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலமாக ஆதாயங்கள் கிடைக்கலாம். பணியிடத்தில் ஏதேனும் பரிசுகள் அல்லது பதவி உயர்வுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

36
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சமசப்தக ராஜயோகம் பல வழிகளில் நன்மை பயக்கும். புதிய மற்றும் உற்சாகமான வழிகள் பிறக்கும். விரும்பிய இடத்திற்கு வேலை மாறுதல் அல்லது இடம் மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மேல் அதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் இருந்த மன அழுத்தங்கள் நீங்கி நிம்மதியான சூழல் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வணிக ஒப்பந்தங்கள் அல்லது பெரிய ஆர்டர்கள் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். குடும்பத்துடன் பயணம் செல்லும் வாய்ப்புகளும் உருவாகும்.

46
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சமசப்தக ராஜயோகம் அதிர்ஷ்டத்தின் கதவுகளை திறக்கும். புதிய வேலையை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால் அது மீண்டும் உங்கள் கைக்கு கிடைக்கும். சந்தைப்படுத்துதல் மற்றும் கற்பித்தல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழலைக் காண்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மனமகிழ்ச்சி அடைவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலமான காலமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். முதலீடுகள் குறித்து எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும்.

56
தனுசு

சந்திரன் மற்றும் செவ்வாய் உருவாக்கும் சமசப்தக ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும். பல்வேறு துறைகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் யோசனைகள் பாராட்டப்படும். உங்கள் செல்வாக்கும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் நீண்ட நாட்கள் கனவுகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேறும். நகைகள், ஆபரணங்கள், சொத்துக்கள், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக கையெழுத்தாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

66
கும்பம்

சமசப்தக ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு ஆடம்பரத்தையும், ஆறுதலையும் அளிக்கும். மனரீதியாக நிம்மதியும், ஆரோக்கியமும் மேம்படும். நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் விலகி சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கடனை அடைப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். கடின உழைப்பிற்கான பலன்கள் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நற்செய்திகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டமும், தர்ம சிந்தனையும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும். வீடு அல்லது மனை வாங்குவது, வீட்டை புதுப்பிப்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories