வேத ஜோதிடத்தில் புதன் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். இவர் புத்தி, வணிகம், தகவல் தொடர்பு, கல்வி, பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரகராக கருதப்படுகிறார். புதன் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை தனது ராசியை மாற்றுகிறார். அதேபோல் ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக கருதப்படுபவர் யுரேனஸ். இவர் புதுமை, திடீர் மாற்றங்கள், புரட்சிகரமான சிந்தனைகள், எதிர்பாராத நிகழ்வுகளுடன் தொடர்புடையது. இது நவீன கிரகமாக கருதப்பட்டாலும், இதன் தாக்கம் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது. இந்த இரு கிரகங்களும் 90 டிகிரி கோணத்தில் அமையும் போது கேந்திர யோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக 3 ராசிகள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.