கடக ராசிக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளது. இந்த வாரம் உங்களுக்கு மனதில் உற்சாகமும், தைரியமும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அதே சமயம் கடக ராசிக்காரர்கள் சில சவால்களையும் சந்திக்க நேரிடலாம். தேவையில்லாத வார்த்தை பிரயோகங்களை தவிர்க்க வேண்டும். பழைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடனை அடைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். தேவையில்லாம மன பயம், மரண பயம் ஆகியவை நீங்கும்.
23
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் உஷ்ணம், அஜீரணம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சத்தான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். உடற்பயிற்சி மற்றும் ஓய்வு மிகவும் முக்கியம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தேவையற்ற மன அழுத்தம், பதட்டத்தை குறைக்க உதவும்.
33
நிதி மற்றும் தொழில்
நிதி விஷயத்தில் இந்த வாரம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் இவை பெரும்பாலும் சுப செலவுகளாகவே இருக்கும். இந்த நாட்களில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை மூலம் நிதி நிலைமையை வலுப்படுத்தலாம். தொழில் ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கலாம். புதிய தொழில்கள் அல்லது திட்டங்களை தொடங்குவதற்கு இது நல்ல நேரமாகும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி, ரியல் எஸ்டேட் மற்றும் வேளாண் தொழில்களில் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.
ஆன்மிகம்:
இந்த வாரம் உங்களுக்கு வெற்றி கிடைக்க பின்வரும் பரிகாரங்களை செய்யலாம். தினமும் ஓம் சந்திரமசே நமஹ மந்திரத்தை ஜெபிக்கலாம். செவ்வாய் கிழமைகளில் துர்கா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். ஓம் கம் கணபதையே மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். குலதெய்வ வழிபாடு, நந்தி வழிபாடு ஆகியவை மிகுந்த பலன்களைத் தரும்.